ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடருக்கான அணியை வெளியிட்டது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் கிறிஸ் லின் மற்றும் மிட்சல் ஸ்டார்க் ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், ஜார்ஜ் பெய்லி ஆகியோர் அணியில் இடம்பிடிக்க தவறிவிட்டனர். ஆல்ரவுண்டராக மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் மொய்சஸ் ஹென்றிக்ஸ் இடம் பெற்றுள்ளனர்.
காயம் காரணித்தால் அவதி பட்டுவரும் மிட்சல் ஸ்டார்க் மற்றும் கிறிஸ் லின், அந்த தொடருக்கு முன்னதாகவே உடல்நலம் பெறுவார்கள் என ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் கூறியுள்ளார்கள்.
பந்து வீச்சில் வேக பந்துவீச்சாளர்கள் மிட்சல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஜான் ஹஸ்ட்டிங்ஸ், ஜோஷ் ஹெசல்வுட் ஆகியோரும், சுழற் பந்துவீச்சாளரில் ஆடம் சம்பா இடம் பெற்றுள்ளார்.
சாம்பியன்ஸ் ட்ராப்பிக்கான ஆஸ்திரேலியா அணி:
ஸ்டீவ் ஸ்மித் (C ), டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ், கிறிஸ் லின், கிளென் மேக்ஸ்வெல், ஜேம்ஸ் பேட்டின்சன், மிட்சல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மத்தியூ வேட், ஆடம் சம்பா, ஆரோன் பின்ச், ஜான் ஹஸ்ட்டிங்ஸ், ஜோஷ் ஹெசல்வுட், டிராவிஸ் ஹெட், மொய்சஸ் ஹென்றிக்ஸ்.