இந்தியா vs ஆஸ்திரேலியா; கடைசி ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணி
ஆஸ்திரேலியா சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.
ஷிகர் தவான்;
முதல் இரு போட்டிகளிலும் மிக சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்த ஷிகர் தவான் கடைசி போட்டியிலாவது தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியே ஆக வேண்டும்.
ரோஹித் சர்மா;
முதல் போட்டியில் சதமும் இரண்டாவது போட்டியில் 40+ ரன்கள் எடுத்து மாஸ் காட்டிய ரோஹித் சர்மா கடைசி போட்டியிலும் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
விராட் கோஹ்லி;
இரண்டாவது போட்டியில் சதம் அடித்து அசத்திய விராட் கோஹ்லி அடுத்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பமனமாக திகழ்வார் என்பதில் சந்தேகம் இல்லை.
அம்பத்தி ராயூடு;
முதல் இரண்டு போட்டிகளிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாத அம்பத்தி ராயூடு அடுத்த போட்டியிலாவது தனது பங்களிப்பை சரியாக செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
தினேஷ் கார்த்திக்;
முதல் இரண்டு போட்டிகளிலும் தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்த தினேஷ் கார்த்திக் அடுத்த போட்டியிலும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு கூடுதல் பலமே.
தோனி;
முதல் இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்து அசத்தியுள்ள தோனி, அடுத்த போட்டியிலும் தனது அதிரடி ஆட்டத்தை தொடர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தோனி ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
ரவீந்திர ஜடேஜா;
தனது பங்களிப்பை மிகச்சரியாக செய்து கொடுத்து வரும் ஜடேஜா அடுத்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடியை கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
குல்தீப் யாதவ்;
சைனாமேன் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை சரியாக செய்யும் பட்சத்தில் அது ஆஸ்திரேலிய அணிக்கு நிச்சயம் கடும் நெருக்கடியை கொடுக்கும்.
முகமது ஷமி;
முகமது ஷமி குறை சொல்ல முடியாத அளவிற்கு தனது பங்களிப்பை மிக சரியாகவே செய்து வருகிறார்.
புவனேஷ்வர் குமார்;
ஆஸ்திரேலிய அணிக்கு தனி ஒருவனாக மிரள வைத்து வரும் புவனேஷ்வர் குமார் அடுத்த போட்டியிலும் மாஸ் காட்டுவார் என்பதில் சந்தேகம் இல்லை.
கலீல் அஹமது;
இரண்டாவது ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராக களமிறக்கப்பட்ட முகமது சிராஜ் ரன்களை வாரி வழங்கியதால் கடைசி போட்டியில் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கலீல் அஹமதே மீண்டும் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.