மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கே.எல் ராகுலிற்கு பதிலாக களமிறங்க போவது யார்..?

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கே.எல் ராகுலிற்கு பதிலாக களமிறங்க போவது யார்..?

தொடர்ந்து சொதப்பி வரும் கே.எல் ராகுல் ஆஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அறிமுக வீரர் மாயன்க் அகர்வால் துவக்க வீரராக களமிறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா ஏ மற்றும் உள்நாட்டு போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த மயன்க் அகர்வாலுக்கு இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. இந்தியா ஏ அணியிலும் உள்நாட்டு போட்டிகளிலும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்துவந்தார் மயன்க் அகர்வால். தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசிய அகர்வால், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராகவும் அண்மையில் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராகவும் கூட அபாரமாக ஆடினார்.

உள்நாட்டு போட்டிகளில் போதுமான அளவிற்கு திறமையை நிரூபித்தாலும் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டே வந்தது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் கூட மயன்க் அகர்வால் இடம்பெற்றிருந்தாலும் பிரித்வி ஷாவிற்குத்தான் ஆடும் லெவனில் இடம்கிடைத்தது. அதுவே கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. பிரித்வி ஷாவும் சிறப்பாக ஆடி திறமையை நிரூபித்ததோடு அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

அதனால் பிரித்வி ஷாவின் இடம் இந்திய அணியில் உறுதியானது. ஆஸ்திரேலிய தொடரிலும் பிரித்வி ஷா தான் அணியில் இடம்பிடித்தார். அகர்வால் புறக்கணிக்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அகர்வாலுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பே கொடுக்காமல் ஆஸ்திரேலிய தொடரில் அவர் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனங்கள் வலுத்தன.

ஜாகீர் கான், கவுதம் காம்பீர் ஆகிய முன்னாள் வீரர்கள் மயன்க் அகர்வால் புறக்கணிக்கப்பட்டதை கடுமையாக கண்டித்தனர். அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். பிரித்வி ஷாவிற்கு பதிலாக அணியில் எடுக்கப்படவில்லை என்றாலும் தொடர்ந்து சொதப்பிவரும் ராகுலுக்கு பதிலாக அவரை எடுக்க வேண்டும் என்ற கருத்து இருந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அகர்வால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், பிரித்வி ஷாவின் காயத்தால் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ராகுலும் முரளி விஜயும் முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பிவிட்டனர். எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அகர்வால் கண்டிப்பாக ஆடுவார். அகர்வாலுடன் ஆடப்போவது யார் என்பது இனிமேல்தான் தெரியவரும்.

இப்படியாக ராகுலுக்கும் பிரித்விக்கும் அமோக ஆதரவு இருக்கும் நிலையில், அதையெல்லாம் கடந்து அணியில் தனக்கான இடத்தை பிடிக்க வேண்டுமென்றால் அகர்வால் முரட்டு அடியாக அடித்தே தீரவேண்டும். அகர்வால் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohamed:

This website uses cookies.