இவனுகள அடிச்சு பேர் வாங்கிக்கங்க; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் ஃப்ரூக் இன்ஜினியர் !!

இவனுகள அடிச்சு பேர் வாங்கிக்கங்க; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் ஃப்ரூக் இன்ஜினியர்

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 6-ந்தேதி தொடங்குகிறது. முன்னணி பேட்ஸ்மேன்களான வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் இல்லாதது ஆஸ்திரேலியா அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். இதுவரை ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வெல்லாத இந்தியாவிற்கு தொடரை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் வீரரான பரூக் என்ஜினீயர், இந்த வாய்ப்பை இந்தியா தவறவிட்டால், அதன்பின் வாய்ப்பே கிடைக்காது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பரூக் அப்துல்லா கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா வார்னர் மற்றும் ஸ்மித் என்ற மிகப்பெரிய வீரர்களை இழந்திருக்கிறது. மிகப்பெரிய இரு வீரர்களை ஆடும் லெவனில் இழக்கும்போது, அந்த அணி மிகப்பெரிய அளவில் பலவீனமாகத்தான் இருக்கும்.

ஆஸ்திரேலியாவை வீழ்த்த இதைவிட மிகச்சிறந்த வாய்ப்பு கிடைக்காது. இரு வீரர்கள் இல்லாத தற்போதைய ஆஸ்திரேலியா ஒரு சராசரியான அணிதான். இந்த வாய்ப்பை நாம் கட்டாயம் பறித்துக் கொள்ள வேண்டும். இந்தியா மிகவும் சிறந்த ஆட்டத்தை விளையாடிகிட்டு இருக்கிறது.

சிறந்த கேப்டனை பெற்றிருக்கிறோம். சிறப்பாக விளையாடிகிட்டு வருகிறார். சிறந்த ஆல்ரவுண்டர்களை பெற்றிருக்கிறோம். அதேபோல் சிறந்த வேகப்பந்து, சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதை சாதகமாக்கி ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலியா மண்ணில் வீழ்த்த வேண்டும்’’ என்றார்.

ஆஸ்திரேலிய தொடர் குறித்து இஷாந்த் சர்மா கூறியதாவது, “ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இல்லாததால் ஆஸ்திரேலிய அணியை குறைத்து மதிப்பிட மாட்டோம். நிச்சயம் இந்த டெஸ்ட் தொடர் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பந்துவீச்சில் அசுர பலம் கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் அளவிற்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்படுவார்கள். ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை வெல்வதே இந்திய வீரர்களின் தற்போதைய இலக்கு” என்று தெரிவித்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.