இந்த அணி தான் தொடரை வெல்லும்;வி.வி.எஸ் லக்‌ஷ்மண் நம்பிக்கை !!

இந்த அணி தான் தொடரை வெல்லும்;வி.வி.எஸ் லக்‌ஷ்மண் நம்பிக்கை

ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெல்லும் என முன்னாள் வீரர் லக்‌ஷ்மண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் 26ம் தேதி துவங்க உள்ளது.

இந்நிலையில் இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ் லக்‌ஷ்மண், ஆஸ்திரேலிய அணியுடனான தொடரை இந்தியே அணியே வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய லக்‌ஷ்மண், ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணியே வெல்லும் என்ற முழு நம்பிக்கை உள்ளது. இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்றார்.

டெஸ்ட் தொடர் குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியதாவது;

ஹனுமா விஹாரியின் பேட்டிங் டெக்னிக் சிறப்பாக உள்ளது. பயமோ பதற்றமோ இல்லாமல் நிதானமாக சிறப்பாக ஆடுகிறார். அவரது பேட்டிங் டெக்னிக் நன்றாக இருப்பதால் அவரையே கூட ஆஸ்திரேலியாவில் ஓபனிங் இறக்கலாம்.

மயன்க் அகர்வாலை தொடக்க வீரராக களமிறக்கினாலும் அவரிடமிருந்து உடனடியாக பெரிய இன்னிங்ஸை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் எடுத்த எடுப்பிலேயே ஆஸ்திரேலியாவில் ஆடுவது எளிதான காரியம் அல்ல. மயன்க் அகர்வாலுக்கு தேவையில்லாமல் கூடுதல் அழுத்தத்தை கொடுக்க வேண்டாம் என்றோ ரிஸ்க் எடுக்க வேண்டாமென்றோ நினைத்தால் முரளி விஜயையும் ஹனுமா விஹாரியையும் தொடக்க வீரர்களாக இறக்கலாம். ஆனால் மயன்க் அகர்வாலும் முரளி விஜயும் தொடக்க வீரர்களாக இறங்கலாம் என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து என்றார் மஞ்சரேக்கர்.

Mohamed:

This website uses cookies.