ரோஹித் ஆஸ்திரேலியா செல்வதில் புதிய சிக்கல்; செக் வைத்த ரவி சாஸ்திரி!

ரோகித் சர்மா ஆஸ்திரேலியா சென்றடைந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கு தயாராகி வரும் நிலையில் புதிய நிபந்தனையை தெரிவித்துள்ளார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா சென்றடைந்து ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்பதற்காக தற்போது இருந்தே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. வருகிற நவம்பர் 27ஆம் தேதி ஒரு நாள் போட்டிகள் துவங்குகின்றன.

முதல் டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு விராட் கோலி மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் ஆடப் போவது இல்லை. அவர் விடுமுறை பெற்று விட்டதால் அவருக்கு மாற்று வீரராக ரோகித் சர்மா மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே அனைத்து வீரர்களும் ஆஸ்திரேலியா சென்றுவிட்ட நிலையில் டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ள இஷாந்த் சர்மா மற்றும் ரோஹித் சர்மா இருவரும் காயத்திலிருந்து குணமடைந்தது பெங்களூருவில் உள்ள தேசிய அகடமியில் பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தேர்ச்சி பெற்ற பின்னர் அவர்கள் ஆஸ்திரேலியா செல்வர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இவர்கள் எப்போது ஆஸ்திரேலியா வரவேண்டும் இந்த தேதிக்குள் ஆஸ்திரேலியா வந்தால் மட்டுமே அவர்களால் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க முடியும் என ரவிசாஸ்திரி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியில்,

” திட்டமிட்டபடி இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குள் ரோகித் சர்மா, இசாந்த் சர்மா இருவரும் ஆஸ்திரேலிய வரவில்லை என்றால் அவர்கள் இந்த டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது மிகவும் கடினமாகிவிடும். ஏனெனில் தேசியக் அகடமியில் பரிசோதனை முடித்து விட்டு அவர்கள் ஆஸ்திரேலியா வந்தால் குறைந்தபட்சம் 14 நாட்கள் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும்.

அதன் பிறகு இரண்டு அல்லது மூன்று பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்ற பிறகு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இல்லை எனில் போதிய பயிற்சி இன்மை காரணமாக மீண்டும் அவர்கள் காயமடைவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன. ஆதலால் இன்னும் 4 அல்லது 5 நாட்களுக்குள் அவர்கள் வரவில்லை என்றால் அவர்களை போட்டியில் ஆட வைப்பது சிரமம்.” என கூறியுள்ளார்.

Prabhu Soundar:

This website uses cookies.