அடுத்த தொடருக்கான 14 பேர் கொண்ட அணி அறிவிப்பு: முக்கிய முன்னணி வீரர் வெளியே

பாகிஸ்தான் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து கவாஜா, மார்கஸ் ஹாரிஸ் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிரிஸ்பேனில் வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான ஆஸ்திரேலியா இன்று அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில் விளையாடிய கவாஜா மற்றும் மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். ஆஷஸ் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்காமல் தவித்த கேமரூன் பான்கிராஃப்ட்டுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. அதேபோல் ஜோ பேர்ன்ஸும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ADELAIDE, AUSTRALIA – DECEMBER 06: Pat Cummins of Australia celebrates with Usman Khawaja of Australia after taking a catch to dismiss Virat Kohli of India during day one of the First Test match in the series between Australia and India at Adelaide Oval on December 6, 2018 in Adelaide, Australia. (Photo by Daniel Kalisz – CA/Cricket Australia/Getty Images)

ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியில் இடம் பிடித்திருந்த நிக் மேடின்சன் மனநிலை அழுத்தம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் பான்கிராஃப்ட் அணியில் சேர்க்கப்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 49 ரன்கள் அடித்ததால் அணியில் இடம் கிடைத்துள்ளது.

வேகப்பந்து வீச்சில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜேம்ஸ் பேட்டின்சன், ஹசில்வுட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ஹசில்வுட்டுக்கு மாற்று வீரராக மிக்கேல் நெசர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புகோவ்ஸ்கி மனநிலை அழுத்தம் காரணமாக விலகியுள்ளதால், ஆஷஸ் தொடரில் இருந்து நீக்கப்பட்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட்டுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Smith was named in the Australian 12-man squad in place of Usman Khawaja for the fourth Test after the former captain recovered from his injury.

பாகிஸ்தான் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. டிம் பெய்ன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), 2. கேமரூன் பான்கிராஃப்ட், 3. ஜோ பேர்ன்ஸ், 4. பேட் கம்மின்ஸ், 5. ஜோஷ் ஹசில்வுட், 6. டிராவிஸ் ஹெட், 7. மார்னஸ் லாபஸ்சாக்னே, 8. நாதன் லயன், 9. மிக்கேல் நெசர், 10. ஜேம்ஸ் பேட்டின்சன், 11. ஸ்டீவ் ஸ்மித், 12. மிட்செல் ஸ்டார்க், 13. மேத்யூ வடே, 14. டேவிட் வார்னர்.

Sathish Kumar:

This website uses cookies.