‘மீண்டும் அம்பையர்களின் தயவில் வென்ற ஆஸ்திரேலியா’ பொருப்பில்லாமல் ஆடிய ஆன்ட்ரு ரஸல்

மே.இ,.தீவுகள் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது நடப்பு உலக சாம்பியன் ஆஸ்திரேலியா. அதன் வெற்றியில் மிச்செல் ஸ்டார்க், நாதன் கோல்டர் நைல் முக்கிய பங்கு வகித்தனர்.
முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை அபாரமாக ஆடி வீழ்த்தியது. அதே போல் ஆப்கன் அணியை எளிதாக வீழ்த்தியது ஆஸி. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாட்டிங்ஹாம் டிரென்ட்பிரிட்ஜில் வியாழக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற மே.இ.தீவுகள் பவுலிங்கை தேர்வு செய்தது.
தொடக்கமே ஆஸி.க்கு சரிவு: ஆஸி. அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் 3 ரன்களுடன் காட்ரெல் பந்தில் ஹெட்மயரிடம் கேட்ச் அளித்து அவுட்டானார்.
கேப்டன் பின்சும் 6 ரன்களோடு, ஓஷேன் தாமஸ் பந்தில், ஷாய் ஹோப்பிடம் கேட்ச் தந்தார்.

13 ரன்கள் எடுத்திருந்த காஜாவை அவுட்டாக்கினார் ரஸ்ஸல்.
சிக்ஸர்களுக்கு பெயர் போன கிளென் மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமல் காட்ரெல் பந்தில் டக் அவுட்டானார்.
ஸ்மித்-அலெக்ஸ் கரே: பின்னர் ஸ்டீவ் ஸ்மித்-மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 4 பவுண்டரியுடன் 19 ரன்களை சேர்த்த ஸ்டாய்னிûஸ வெளியேற்றினார் ஹோல்டர்.
அவருக்கு பின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கரே சேர்ந்து ஸ்கோரை உயர்த்தினார்.7 பவுண்டரியுடன் 45 ரன்களை எடுத்த கரேவை ரஸ்ஸல் வீழ்த்தினார்.
ஸ்மித் அரை சதம்: முன்னாள் கேப்டனான ஸ்மித் நிதானமாக ஆடி 73 ரன்களுடன் அரைசதத்தை பதிவு செய்து ஓஷேன் தாமஸ் பந்தில் வெளியேறினார். பேட் கம்மின்ஸ் 2, மிச்செல் ஸ்டார்க் 8 ஆகியோரை பிராத்வொயிட் வெளியேற்றினார்.
நாதன் கோல்டர் நைல் அபாரம்: ஆல்ரவுண்டரான நாதன் நைல் 4 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 60 பந்துகளில் 92 ரன்களை விளாசி பிராத்வொயிட் பந்தில் வெளியேறினார். இந்த ஆட்டத்தில் முதல் அரைசதத்தையும் பதிவு செய்தார் அவர். இறுதியில் 49 ஓவர்களில் 288 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியா.
பிராத்வொயிட் 3 விக்கெட்: மே.இ.தீவுகள் தரப்பில் பிராத்வொயிட் 3-67, ஓஷேன் தாமஸ் 2-63, ஆன்ட்ரெ ரஸ்ஸல் 2-41, காட்ரெல் 2-56 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மே.இ.தீவுகள் தடுமாற்றம்: 289 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் தொடக்கத்திலேயே சரிவை சந்தித்தது. எவின் லெவிஸ் 1 ரன்னோடு பேட்கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட்டானார்.

ஸ்டார்க் பந்தில் 21 ரன்களுடன் எல்பிடபிள்யு முறையில் அவுட்டானார் கெயில்.பின்னர் நிக்கோலஸ் பூரண்-ஷாய் ஹோப் நிதானமாக ரன்களை சேர்த்தனர்.
1 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 40 ரன்களை சேர்த்திருந்த நிக்கோலஸ், ஆடம் ஸம்பா பந்துவீச்சில் வெளியேறினார். ஷிம்ரன் ஹெட்மயரும் 21 ரன்களுடன் அவுட்டானார்.
ஷாய் ஹோப் அரைசதம்: மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஷாய் ஹோப் 68 ரன்களுடன் தனது 11-ஆவது அரைசதத்தை பதிவு செய்து அவுட்டானார்.
ஹோல்டர் 9-ஆவது அரைசதம்: ஒருபுறம் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் நிலைத்து ஆடினாலும். மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்து கொண்டே வந்தன.
ரஸ்ஸல் 15, பிராத்வொயிட் 16, ஷெல்டன் காட்ரெல் 1 ரன்களுடன் வெளியேறினர். 1 சிக்ஸர், 7 பவுண்டரியுடன் 57 ரன்களை எடுத்த ஹோல்டரை அவுட்டாக்கினார் ஸ்டார்க் . ஆஷ்லி நர்ஸ் கடைசியாக 4 பவுண்டரிகளை விளாசியதால் ஆஸி. தரப்பினர் பதற்றமடைந்தனர்.

இறுதியில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. ஆஷ்லி நர்ஸ் 19, ஓஷேன் தாமஸ் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர்.
மிச்செல் ஸ்டார்க் 5 விக்கெட்:
ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டார்க் அற்புதமாக பந்துவீசி 46 ரன்களை மட்டுமே தந்து 5 விக்கெட்டை சாய்த்தார். இது அவர் 5 விக்கெட்டை வீழ்த்துவது 6-ஆவது முறையாகும். பேட் கம்மின்ஸ் 2-41 விக்கெட்டை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் தனது 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்தது ஆஸ்திரேலியா.
நாதன் நைல் புதிய சாதனை:
உலகக் கோப்பை வரலாற்றில் 8-ஆம் நிலை பேட்ஸ்மேனாக ஆடி அதிகபட்ச ஸ்கோர் (92) அடித்த சாதனையை நிகழ்த்தினார் நாதன் கோல்டர் நைல். மேலும் ஒருநாள் ஆட்டத்த்தில் 2-ஆவது அதிகபட்ச ஸ்கோரை அடித்த சாதனையையும் படைத்தார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

Sathish Kumar:

This website uses cookies.