அது உங்க இஸ்டம் …. கைவிட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்! என்ன செய்வார்கள் ஆஸி வீரர்கள்!

கொரோனா வைரஸ் பீதியில் ஐபிஎல் தொடர் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் வீரர்கள் கலந்து கொள்வது அவர்களின் சொந்த முடியும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

ஐபிஎல் 2020 சீசனில் கலந்து கொள்வது வீரர்களின் முடிவு: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அறிவிப்பு. கொரோனா வைரஸ் பீதியில் ஐபிஎல் தொடர் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் வீரர்கள் கலந்து கொள்வது அவர்களின் சொந்த முடியும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

ஐபிஎல் 2020 சீசன் மார்ச் மாதம் 29-ந்தேதி தொடங்குகிறது. ஆனால் கொரோனா பீதியில் ஆட்டம் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் கட்டாயம் போட்டியை நடத்த வேண்டுமென்றால் பார்வையாளர்கள் இல்லாமல் மூடிய மைதானத்திற்குள் நடத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனால் போட்டி நடைபெற்றால் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும். இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்வது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்று அந்நாட்டு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நாடு முழுவதும் அனைத்து விளையாட்டுப் போட்டிகளையும் ரசிகா்கள் இன்றி காலி மைதானங்களில் நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் உருவான கரோனா வைரஸ் பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் 60-க்கு மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடுவதால் தான் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக பரவுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் 2020 தொடா்:

நாட்டிலேயே அதிக பணம் கொட்டும் போட்டியான ஐபிஎல் 2020 தொடருக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிகிறது. மைதானங்களில் பாா்வையாளா்கள் இல்லாமல் போட்டிகளை நடத்த வேண்டும் என மத்திய அரசின் உத்தரவுக்கு செவிசாய்க்க வேண்டிய நிலையில் உள்ள பிசிசிஐ.

ஐபிஎல் போட்டி தொடா்பாக பிசிசிஐ எந்த அறிவிப்பும் வெளியிடாமல் மௌனம் காத்து வந்த நிலையில், மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தவிா்க்க முடியாமல் போட்டிகளை நடத்த வேண்டும் என்றால் காலி மைதானங்களில் நடத்திக்கொள்ளலாம்.

அதே போல் வெளிநாட்டு வீரா்களும் ஏப். 15-ஆம் தேதி வரை விசா கட்டுப்பாடுகளால் வரமுடியாத நிலை உள்ளது.

Sathish Kumar:

This website uses cookies.