வீடியோ : ஜடேஜாவிற்கு பதில் சாஹலை இறக்கக் கூடாது !வரிந்து கட்டிக் கொண்டு வந்த ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ! உண்மையில் நடந்தது என்ன ?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டியில் நேற்று நடைபெற்று முடிந்துவிட்டது. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பல சர்ச்சைகள் ஏற்பட்டன. குறிப்பாக இந்திய ஆல் ரவுண்டர் ஜடேஜாவிற்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மாற்று வீரராக இறக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியாவிற்கு மிகப் பெரும் அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. இதன் காரணமாக அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் வரிந்து கட்டிக் கொண்டு வந்து ஆஸ்திரேலியா நடுவரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி தட்டுத்தடுமாறி வந்து கடைசியில் ரவிந்திர ஜடேஜாவின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 161 ரன்கள் குவித்தது. கடைசியாக ஆடிய ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார்.
ஜடேஜா ஆடிக்கொண்டிருக்கும் போது அவருக்கு பின் தொடை பகுதியில் தசை பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பேட்டிங்கின் போது அவர் சிரமப்பட்டதை நம் கண்களால் பார்க்க முடிந்தது. மேலும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் வேண்டுமென்றே ரவிந்திர ஜடேஜாவின் தலையில் தாக்கும் பந்துகளை வீசி கொண்டிருந்தனர். இதன் காரணமாக முதல் ஆட்டம் முடிந்தவுடன் ஐசிசி விதிகளின்படி அவருக்கு பதில் மாற்று வீரராக யுஸ்வேந்திர சாஹல் களம் இறக்கப்பட்டார்.
இதனை பார்த்த ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் இது முறையானது அல்ல. இப்படி ஒரு ஆல்ரவுண்டருக்கு மாற்று வீரராக சுழற்பந்துவீச்சாளர் இருக்கக் கூடாது என்று வாதித்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோவை நாம் நேராக பார்க்க முடிந்தது. மேலும் ஆஸ்திரேலிய நடுவராக இருந்த டேவிட் பூன் அவையெல்லாம் வீதிகளில் இருக்கிறது. இப்படி தேவையில்லாமல் வாக்குவாதம் செய்யாதீர்கள் என்றார் நடுவர். பின் இந்திய வீரர்களை ஆட அனுமதித்தார்.
இதேபோல்தான் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆஷஸ் டெஸ்ட் தொடரின்போது அடிபட்டது. அப்போது மார்னஸ் அவருக்குப் பதிலாக களமிறங்கி மிகச் சிறப்பாக விளையாடி அந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுக்கொடுத்தார். அப்போதெல்லாம் அமைதிக் காத்த ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தனது அணிக்கு எதிராக அவர்கள் செய்யும் செயல் நடைபெற்றவுடன் கொதித்தெழுந்தார்.
இது ஆஸ்திரேலிய வீரர்களின் வாடிக்கையாக இருக்கிறது. அவர்களுக்கு ஒன்று என்றால் ரத்தமாகவும் நமக்கு ஒன்று என்றால் தக்காளி சட்னி ஆகவும் பார்ப்பது அவர்களது வாடிக்கையாக மாறிவிட்டது.