காம்பீரை வம்புக்கு இழுத்து இந்திய ரசிகர்களிடம் வாங்கிக்கட்டி கொண்ட ஆஸ்திரேலிய பத்த்ரிக்கையாளர்
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான காம்பீர் வார்த்தையால் தீவிரவாதத்தை விதைக்கிறார் என்று விமர்சித்த ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளருக்கு இந்திய ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான தொடர் முக்கிய நகரங்களில் தற்போது நடக்கிறது.
இதில் பங்கேற்கும் டெல்லி டேர்டெவில்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனால், தானாக முன்வந்து கொல்கத்தா அணியில் இருந்து விலகி, தனது சொந்த அணியான டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு கோப்பை வென்று தர திட்டமிட்டு சென்ற கேப்டன் கவுதம் காம்பிர், கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.
இதன் பின் டெல்லி வெற்றி தேடித்தர முடியாத சோகத்தில், எஞ்சியுள்ள போட்டிகளில் சம்பளம் கூட வாங்குவதில்லை என காம்பிர் அறிவித்தார். இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் பதற்றம் குறித்து சமீபத்தில் பேசிய காம்பிர்,‘இருநாட்டு உறவுகள் சீராகும் வரை வெறும் கிரிக்கெட்டை மட்டும் புறக்கணிப்பதால் எந்த பலனும் இல்லை. சினிமா, இசை, இன்னும் எல்லா துறையிலும் பாகிஸ்தானியர்களுக்கு இந்திய எந்த வாய்ப்பும் வழங்க கூடாது.’ என கடுமையாக விமர்சித்தார்.
இந்த விமர்சனத்துக்கு ஆஸ்திரேலியாவின் பத்திரிக்கையாளர் ஒருவர் காம்பிரை,’ வாய் வழித்தீவிரவாதி,’ என டுவிட்டரில் கருத்து தெரிவித்தார். இதைப்பார்த்த இந்திய ரசிகர்கள், அதை ஆஸ்திரேலியர்கள் சொல்வது ஆச்சரியமாக இருப்பதாக, அவருக்கு லெப்ட், ரைட் கொடுத்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான கவுதம் காம்பீர் பல பொது சேவைகள் செய்வதோடு, அனைத்து பொது பிரச்சனைகளுக்கும் குரல் குடுப்பதை தனது வாடிக்கையாக வைத்துள்ளார். சில பிரச்சனைகளில் சரியாக கருத்து தெரிவிக்கும் காம்பீர், பல பிரச்சனைகளில் அரசாங்கத்தின் தவறுகளை மறைத்து ஒரு சமூகத்திற்கு எதிராக பெரும் வெறுப்புணர்வுடன் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவது யாராலும் மறுக்க முடியாத உண்மை.