இந்தியாவின் இந்த திட்டத்தை நொறுக்குவதே எங்களது லட்சியம் ! மார்னஸ் லபுஸ்சேனின் ஆக்ரோஷமான பேட்டி !

இந்தியாவின் இந்த  திட்டத்தை  நொறுக்குவதே எங்களது லட்சியம் ! மார்னஸ் லபுஸ்சேனின் ஆக்ரோஷமான பேட்டி !

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்குபெற்று விளையாடி வருகிறது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட்  தொடரில் தற்போது இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது மெல்போர்ன் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்துவிட்டது.

இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. முதல் போட்டியில் தோல்வியை கண்ட இந்திய அணி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில்  தங்களது வெறித்தனமான வெற்றியை பதிவு செய்துள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஜின்கியா ரஹானே இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

2வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ரஹானே லெக்சைடில் அதிக பீல்டர்களை நிறுத்தி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை திணற வைத்தார். இந்நிலையில் லெக் சைடில் போடப்பட்ட பந்து ஒன்றில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்மித் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் ரெண்டெட் 1.94 ஆக இருந்தது. இது ஆஸ்திரேலியர்களுக்கு  மிகப்பெரிய நெருக்கடியாக இருந்தது. இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்சேன் பேசியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் “லெக்சைடில் பீல்டர்களை  நிறுத்தி பந்து வீசுவது பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சவாலான ஒன்று. இதன் மூலம் பவுண்டரி அடிப்பது எளிதாக இருந்தாலும் சிங்கிள்ஸ் எடுப்பது மிகவும் கடினமாக இருக்கும். இந்திய அணியின் இந்த முறையை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படுத்தியதற்கு பாராட்ட வேண்டும். இந்திய அணி 2-வது டெஸ்ட் போட்டியில் முன்கூட்டியே  ஒரு திட்டத்துடன் தான் களமிறங்கி உள்ளனர். 

ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு விதமான திட்டங்களை மேற்கொள்ளும், அதற்கெல்லாம் நாம் தயாராக இருக்க வேண்டும். எனவே மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்த திட்டத்தை உடைத்து  இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியம். மூன்றாவது டெஸ்ட் போட்டியில்  எங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எங்களது தற்போது குறிக்கோளாக இருக்கிறது” என்று ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்சேன் கூறியுள்ளார்.

Prabhu Soundar:

This website uses cookies.