தேதி, அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது… விரைவில் துவங்குகிறது டி.20 தொடர் !!

தேதி, அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது… விரைவில் துவங்குகிறது டி.20 தொடர்

ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் பிக்பாஸ் லீக் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் ஐ.பி.எல் டி.20 தொடரை போன்று, ஆஸ்திரேலியாவிலும் கடந்த சில ஆண்டுகளாக பிக்பாஸ் லீக் என்ற பெயரில் டி.20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா காரணமாக இங்கு ஐ.பி.எல் தொடர் தள்ளி வைக்கப்பட்டதை போன்றே, அங்கு பிக்பாஸ் லீக்கும் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், டிசம்பர் மாதம் பிக்பாஸ் லீக் துவங்கும் என அறிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த தொடருக்கான அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

டிசம்பர் மாதம் 3ம் தேதி துவங்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் மெல்போர்ன் ரெனிஹட்ஸ் அணியை அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி எதிர்கொண்டு விளையாட உள்ளது.

மொத்தம் 60 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் இறுதி போட்டியானது பிப்ரவரி மாதம் 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்டவணைகள் வெளியிடப்பட்டாலும் பிக்பாஸ் தொடர் நடப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவின் தலைநகரான சிட்னியில் கட்டுக்குள் இருந்த கொரோனாவின் தாக்கம் தற்பொழுது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பி.பி.எல் தொடர் துவங்குவதற்கு முன்பு நிலைமை கட்டுக்குள் வந்தால் மட்டுமே பி.பி.பில் தொடரும் நடத்தப்படும் என தெரிகிறது.

Mohamed:

This website uses cookies.