இந்திய – ஆஸ்திரேலிய தொடருக்கான அணி அறிவிப்பு : 7 வீரர்கள் வெளியே!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது. உலக கோப்பையில் விளையாடிய 7 வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

 

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீசுடன் விளையாடி வருகிறது. வருகிற 22-ந் தேதியுடன் இந்த தொடர் முடிகிறது.

இதன்பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா அணி இந்தியா வந்து 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

முதல் ஆட்டம் ஜனவரி 14-ந் தேதி மும்பையிலும், 2-வது போட்டி 17-ந் தேதி ராஜ்கோட்டிலும், 3-வது மற்றும் கடைசி ஆட்டம் 19-ந் தேதி பெங்களூரில் நடக்கிறது.

BIRMINGHAM, ENGLAND – JULY 11: Aaron Finch of Australia during the Semi-Final match of the ICC Cricket World Cup 2019 between Australia and England at Edgbaston on July 11, 2019 in Birmingham, England. (Photo by Andy Kearns/Getty Images)

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது. உலக கோப்பையில் விளையாடிய 7 வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மேக்ஸ்வெல், உஸ்மான் கவாஜா, ஷான்மார்ஷ், நாதன் ஹோல்டர் நைல், ஸ்டோனிஸ், நாதன் லயன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக பெஹரன் டார்ப் இடம் பெறவில்லை.

டெஸ்ட் போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி வரும் மார்னஸ் லபுஸ்சேன் ஒருநாள் போட்டிக்கான அணியில் அறிமுகமாகி உள்ளார். அவரது டெஸ்ட் சராசரி 58.05 ஆகும்.

ஆல் ரவுண்டர் அபோட், ஆஸ்டன் அகர் ஆகியோர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம் பெற்றுள்ளனர்.

(12,998 runs) is two runs away to complete his 13,000 international runs. Till the date, eight Australian batsmen have reached this 13,000-run milestone in the international career.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் வருமாறு:-

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவ் சுமித், ஆஸ்டன் டர்னர், கானே ரிச்சர்ட்சன், அலெக்ஸ் கேரி, அபோட், ஆஸ்டன் அகர், கம்மின்ஸ், ஹேண்ஸ்ஹோம், ஹாசில்வுட், ஸ்டார்க், ஆடம் சம்பா.

Sathish Kumar:

This website uses cookies.