முதல் டி20 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இதுதான்! இடம் பிடித்த புதுமுக இளம் வீரர்கள்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் ஒருநாள் டி20 ஆகிய தொடர்கள் தற்போது நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்துவிட்டது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றி விட்டது. தனது பெருமையை நிலைநாட்டும் வகையில் இந்திய அணி 3-வது போட்டியில் வெற்றி பெற்று டீ20 தொடருக்கு தயாராகியிருக்கிறது.
ஒரு நாள் தொடரைப் போல டி20 தொடரிலும் 3 போட்டிகள் தான் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதன் முதல் போட்டி வெள்ளிக்கிழமை டிசம்பர் 4ஆம் தேதி இந்திய நேரப்படி 1.40 மணிக்கு துவங்க இருக்கிறது. ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி எப்படியாவது இந்த முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெற்றிகரமாக துவக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் தனது சொந்த மண்ணில் நடப்பதால் டி20 தொடரையும் இரக்கமில்லாமல் வெற்றி கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணி துடியாய் துடித்துக் கொண்டிருப்பது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை ஒரு நாள் தொடரில் இடம் பெற்ற அனைத்து வீரர்களும் இடம் பிடித்திருக்கின்றனர். ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் ஆடிய இளம் வேகப்பந்து வீச்சாளர் கேமரூன் கிரீன் சீன் அப்பாட் ஆகியோர் டி20 தொடரின் முதல் போட்டியிலும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
வழக்கம்போல் டேவிட் வார்னர் காயம் காரணமாக இந்த தொடர்பு இருந்து வெளியேறிவிட்டார் அவருக்கு பதிலாக டார்சி ஷார்ட், அதனைத் தொடர்ந்து மேத்யூ வேட், ஸ்டீவன் ஸ்மித், கிளன் மேக்ஸ்வெல், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜாம்பா மார்க்கஸ் ஸ்டோரீஸ் ஆகிய வீரர்கள் களம் இறங்க வாய்ப்பு இருக்கிறது.
இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களமிறங்க வாய்ப்பு உள்ள ஆஸ்திரேலியா அணியின் வீரர்களின் பட்டியல்.
ஆரோன் பிஞ்ச் (சி), அலெக்ஸ் கேரி (வார), மத்தேயு வேட், ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், ஆஷ்டன் அகர், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட், ஆண்ட்ரூ டை, மார்னஸ் லாபுசாக்னே, டி ஆர்சி ஷார்ட், கேமரூன் க்ரீன், டேனியல் சாம்ஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ்