டேவிட் வார்னர் சுத்த வேஸ்ட்… இவர கேப்டனாக்குன நீங்க முன்னேற கொஞ்சம் வாய்ப்பு இருக்கு; டெல்லி அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் சுனில் கவாஸ்கர்
டெல்லி அணியின் கேப்டனாக இந்த வீரரை நியமித்தால் டெல்லி அணி சிறப்பாக செயல்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட காயம் காரணமாக 2023 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் இடம் பெற மாட்டார் என்பதால் டெல்லி கேப்பிட்டல் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற டேவிட் வார்னர் அணியை சிறப்பாக வழி நடத்தி வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவருடைய கேப்டன்ஷிப் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை.
இதுவரை 7 போட்டிகளை எதிர் கொண்ட டெல்லி அணி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி அணியாக இடம் பெற்றுள்ளது. இந்த இரண்டு போட்டியிலும் டெல்லி அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேலின் சிறப்பான ஆட்டத்தின் மூலமே டெல்லி அணி வெற்றி பெற்றது என்று கூறினால் அது இன்றியமையாது தான்.
இதனால் மோசமாக செயல்படும் டேவிட் வார்னரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அணிக்காக கடுமையாக உழைக்கும் அக்சர் பட்டேலை டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கலாம் என பெரும்பாலான முன்னால் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஐபிஎல் தொடர் குறித்து தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்., தற்பொழுது டெல்லி அணியில் துணை கேப்டனாக இடம்பெற்றிருக்கும் அக்சர் பட்டேலை கேப்டனாக நியமிக்கலாம் அப்பொழுதாவது அணி முன்னேற்றம் அடையும் என செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக பேசியுள்ளார்.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில்.,“அக்சர் பட்டேலை டெல்லி அணியின் கேப்டனாக நியமித்தால் டெல்லி அணி முன்னேறும் என நம்புகிறேன், அவர் சிறந்த வீரராகவும் மற்றும் நல்ல பார்மிலும் உள்ளார்.அவரை டெல்லி அணியின் கேப்டன் ஆக்கினால் அதனால் இந்திய அணிக்கு நல்ல பலன் கிடைக்கும்,இது அனைத்துமே நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் அமையும்” என சுனில் கவாஸ்கர் பேசியருந்தது குறிப்பிடத்தக்கது.