விராட் கோலியா? பாபர் அசாமா? மீண்டும் ஒருமுறை விராட் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் பாபர் அசாம்!

டி20 போட்டிகளில் விராட் கோலி சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார் பாபர் அசாம்.

27 வயதான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலிக்கு இணையாக பேசப்பட்டு வருகிறார். இத்தனை ஆண்டுகாலம் விராட் கோலி நிகழ்த்தி வந்த சாதனைகளை ஒன்றன்பின் ஒன்றாக பாபர் அசாம் முறியடித்து வருகிறார். அடுத்ததாக டி20 போட்டிகளில் அதிவேக 3000 ரன்கள் சாதனையை முறியடிக்கும் முனைப்பில் பாபர் அசாம் விளையாடி வருகிறார்.

பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பைக்கு முன்னோட்டமாக, ஏழு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 4 போட்டிகளில் முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வென்றுள்ளது. இரண்டாவது டி20 போட்டியில் பாபர் அசாம் சதம் விலாசி அணியின் வெற்றிக்கு உதவினார். நான்காவது டி20 போட்டியில் 36 ரன்கள் அடித்திருந்தார்.

இதுவரை 79 இன்னிங்சில் விளையாடியுள்ள பாபர் அசாம், 2939 ரன்களை அடித்திருக்கிறார். சர்வதேச டி20 போட்டிகளில் விராட் கோலி அதிவேகமாக 81 இன்னிங்களில் 3000 ரன்கள் கடந்து சாதனையை புரிந்தார். தற்போது 79 இன்னிங்சில் விளையாடி உள்ள பாபர் அசாம், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் 62 ரன்கள் அடித்தால் விராட் கோலியின் இந்த அதிவேக 3000 ரன்கள் சாதனையை முறியடிக்கலாம்.  80 வது இன்னிங்ஸில் இந்த சாதனையை முறியடிக்க பாபர் அசாமிற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

பாகிஸ்தான்-இங்கிலாந்து 4வது டி20:

நான்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ரிஸ்வான் எண்பத்தி 88 ரன்கள், கேப்டன் பாபர் அசாம் 36 ரன்கள் அடித்திருந்தனர். அடுத்ததாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 19.2 அவர்களின் அனைத்து விக்கெடுக்களையும் இழந்து, 163 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. வருகிற 28ஆம் தேதி ஐந்தாவது டி20 போட்டி நடைபெற இருக்கிறது. இதில் பாபர் அசாம் 61 ரன்களுக்கு அதிகமாக அடித்தால் விராட் கோலியின் சாதனையை முறியடிக்கலாம்.

Mohamed:

This website uses cookies.