தனிகாட்டு ராஜாவாக இருந்த விராட் கோலியை தட்டி தூக்கிய பாக் வீரர்! ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியல் அறிவிப்பு

ஜசிசி தற்போது ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவில்லை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று நடந்து இருக்கிறது.

இந்திய அணியின் தலைச்சிறந்த கேப்டனாக வலம் வரும் விராட் கோலி கடந்த மூன்று வருடங்களாக ஐசிசி ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து வந்தார். ஆனால் தற்போது பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் இவரது இந்த பெருமையை தட்டிச் சென்றார். பாபர் அசாம் 865 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். விராட் கோலி 857 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

இதனால் பாபர் அசாமை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதையடுத்து இந்திய வீரர் ஹிட்மேன் ரோகித் சர்மா 825 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இதையடுத்து நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் 801 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் அரோன் பின்ச் 791புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றனர்.

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி 2007முதல் ஒருநாள் தொடரில் யாரும் அசைக்க முடியாத வீரராக இருந்திருக்கிறார். ஆனால் தற்போது இந்த பெருமை பறிபோனதுக்கு காரணம் என்வென்றால் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய ஒருநாள் தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாடவில்லை.

மூன்று போட்டிகளிலும் சேர்த்து 129 ரன்கள் மட்டுமே குவித்து இருக்கிறார். விராட் கோலி ஒருநாள் தொடரில் சதம் அடித்தும் இரண்டு வருடங்களானது. ஆனால் பாகிஸ்தான் பேட்ஸ்மன் பாபர் அசாம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஒருநாள் தொடரில் சிறப்பாக வாளையாடி இருக்கிறார்.

மூன்று போட்டிகளில் பேட்டிங் பெய்த பாபர் 226 ரன்கள் குவித்து இருக்கிறார். இதில் ஒரு சதம் அடித்து இருக்கிறார். விராட் கோலியின் இந்த பெருமையை நொருக்கியதற்காக அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Prabhu Soundar:

This website uses cookies.