இவரது விக்கெட்தான் எனது சிறந்த விக்கெட்: குல்தீப் யாதவ்

பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸமை வீழ்த்தியது தான் இந்த போட்டியில் எனது சிறந்த பந்துவீச்சு என சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.
பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. பாபர் ஆஸம்-ஃபகர் ஸமான் உள்ளிட்ட இருவரும் நிலையாக ஆடி பாக். ஸ்கோரை உயர்த்தினர். இந்நிலையில் இடதுகை வீச்சாளரான குல்தீப் வீசிய பந்து பாபர் ஆஸமின் பேட் மற்றும் கால்பட்டையில் படாமல் சுழன்று ஸ்டம்பை வீழ்த்தியது. தான் அவுட்டானதை நம்ப முடியாமல் பாபர் ஆஸம் வெளியேறினார்.

இதுதொடர்பாக குல்தீப் கூறுகையில்: ஏற்கெனவே ஆசியக் கோப்பை போட்டியிலும் பாபரை அவுட்டாக்கினேன். எனினும் இப்போது அவரது விக்கெட்டை வீழ்த்தியது தான் இந்த போட்டியில் எனது சிறந்த பந்துவீச்சு. மழை வந்தபோது, நான் சென்று விடியோவில் பார்த்தேன். பந்து சிறப்பாக திரும்பிச் சென்றதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. பேட்ஸ்மேனை ஏமாற்றி, அவரை தவறு செய்ய தூண்டிய பந்துவீச்சு இது.
பாபர், ஃபகர் இருவரும் சுழற்பந்து வீச்சை சிறப்பாக அடித்து ஆடினர். அந்த இணையை பிரித்தது பலனை தந்தது என்றார் குல்தீப்.

கடந்த சில மாதங்களாக குல்தீப் பந்துவீச்சு எடுபடாத நிலையில், பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்தனர். இதற்கு பதில் தரும் வகையில் குல்தீப் சிறப்பாக வீசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை பாக். தோல்வி: முன்னாள் வீரர்களின் புலம்பல்

வாசிம் அக்ரம்: என்னை பொறுத்தவரையில் உலகக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட பாகிஸ்தான் அணி சரியாக இல்லை. உலகக் கோப்பை தொடருக்கு என்று எந்தவித திட்டத்தையும் பாகிஸ்தான் அணியிடம் என்னால் பார்க்க முடியவில்லை. வெற்றி அல்லது தோல்வி விளையாட்டின் ஒரு அங்கம். ஆனால் இதுபோன்ற வழியில் இருக்கக்கூடாது. போராடாமல் தோல்வியடையக் கூடாது.

ஷிகந்தர் பகத்: இதற்கு ஒரே தீர்வு வீரர்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும். நெருக்கடியான சூழ்நிலையில் கட்டாயம் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்த வேண்டும். இதன் அடிப்படையிலேயே வீரர்களுக்கான சம்பள ஒப்பந்தம் வழங்க வேண்டும்.

முகமது யூசுப்: நாங்கள் இந்தியாவு

க்கு எதிராக விளையாடியபோது அது எங்களுக்கு உயர் மதிப்புமிக்க போட்டியாக இருந்தது, நாங்கள் ஒருபோதும் தோற்க விரும்பியதில்லை. ஆனால் தற்போதைய ஆட்டத்தில் கேப்டன் சர்பிராஸ் அகமது மற்றும் வீரர்களின் உடல் மொழியானது நேர்மறை மற்றும் ஆற்றல் மிக்கதாக இல்லை. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் விராட் கோலி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்து தவறு செய்தார். அதே தவறை தற்போது சர்பிராஸ் அகமது செய்துள்ளார்.

மோஷின் கான்: இந்திய அணி எவ்வளவு வலிமையாக இருந்தது என்பது எல்லாம் பிரச்சினை இல்லை. உண்மை என்னவெனில் போட்டியில் நாம் வெல்ல முடியும் என்று தங்களை நம்புவதற்கான உந்துதல், ஆற்றல் பாகிஸ்தான் அணி வீரர்களிடம் இல்லை.

அப்துல் ரஸாக்: திட்டங்களை செயல்படுத்துவதற்கான திறன்கள் இல்லாத வீரர்கள் அணியில் இருந்தால் அவர்களை தூக்கி எறிய வேண்டும். இந்திய அணி விரைவிலேயே காயம் காரணமாக புவனேஷ்வர் குமாரை இழந்தது. ஆனால் மற்ற பந்து வீச்சாளர்கள் தங்களது பணி என்ன என்பதை அறிந்திருந்ததால் புவனேஷ்வர் குமார் இல்லாததை உணரவில்லை.

Sathish Kumar:

This website uses cookies.