உண்மைய சொல்லனும்னா இந்த இரண்டு வீரர்களும் இல்லாமல் போனது தான் மிகப்பெரும் பின்னடைவாக அமைந்தது என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்திருந்தார்
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் தென் ஆப்ரிக்கா அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது.
மூன்றாவது போட்டியில் இந்திய அணி தனது மானம் காக்கவாவது சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்த்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் மோசமாக விளையாடி தோல்வியை தழுவியது.
சமகால கிரிக்கெட் உலகின் தலைசிறந்த அணியை பார்க்கப்படும் இந்திய அணியின் இந்த மோசமான தோல்வி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் இந்த தோல்வி பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளதால், முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் இந்திய அணியின் தோல்வி குறித்தான தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதில் பெரும்பாலானவர்கள் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சரியில்லை என்றும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சு எடுபடவில்லை என்றும், கேப்டன்ஷிப் சரியில்லை என்றும் பேசி வரும் வேளையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய அணியின் உண்மையான பிரச்சனை என்னவென்பது குறித்து விளக்கமாக பேசியுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, நேர்மையாக சொல்லப்போனால் இந்திய அணியை பலம் வாய்ந்த அணியாக வைத்திருந்த ஒரு சில வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை, அவர்கள் காயம் காரணமாக ஓய்வில் உள்ளார்கள் என்று ஜடேஜா மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகிய இருவரையும் மேற்கோள்காட்டினார், மேலும் இந்த இரண்டு ஆல்ரவுண்டர்களும் ஒருவேளை இருந்திருந்தால் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்திருப்பார்கள், இதனால் இந்திய அணிக்கு சாதகமான நிலைமை உருவாகிருக்கும். இந்த இரண்டு வீரர்களும் அடுத்த தொடரில் குணமாகி அணிக்கு திரும்பி விடுவார்கள் என நம்புகிறேன், இதனால் இந்திய அணி மீண்டும் பலம் வாய்ந்த அணியாக உருவெடுக்கும் என்றும் டிராவிட் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.