ஆஷஸ் தொடரிலும் அட்டூழியம் செய்த ஆஸ்திரேலியா.. புதிய வீடியோ வெளியானது !!

ஆஷஸ் தொடரிலும் அட்டூழியம் செய்த ஆஸ்திரேலியா.. புதிய வீடியோ வெளியானது

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் போதும் கேமிரான் பென்கிராப்ட் பந்தை சேதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட புதிய வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலியாவின் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியது வீடியோவில் தெளிவாக தெரியவந்ததால் பூதாகரமானது. அதை ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பேன்கிராஃப்ட் ஆகியோர் ஒப்புக்கொண்டனர்.

இந்த தவறை முதன் முறையாக செய்துவிட்டோம் மன்னித்து விடுங்கள் என பேன்கிராஃப்ட் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் பந்தை சேதப்படுத்துவதையே வேளையாக வைத்து இருக்கும் விடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்தாண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிராக சிட்னியில் நடந்த ஆஷஸ் தொடரின் போது பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்துவதற்காக டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து சர்க்கரையை தன் பாக்கெட்டுக்குள் வைத்து எடுத்து செல்லும் வீடியோ தற்போது ஒருவர் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆஸ்திரேலிய வீரர்களையும், பேன்கிராஃப்டையும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

இந்த தவறு உறுதியாகும் பட்சத்தில் நிச்சயம் கேமிரான், ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் மீது வாழ்நாள் தடை பாயும் என்பது நிச்சயம்.

 

Mohamed:

This website uses cookies.