கொல்கத்தாவில் நடைபெற்று வரும் பிங்க் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 106 ரன்களுக்கு சுருண்டது. இதற்கு ட்விட்டரில் ரசிகர்கள் கருத்தை காண்போம்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் இன்று வரலாற்று சிறப்புமிக்க பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக பிங்க் நிறப்பந்து டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்படுவதால் இதைக்காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர்.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் டெஸ்ட் போட்டியில் அசத்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அதே உத்வேகத்துடன் பகலிரவு டெஸ்ட் போட்டியில் களமிறங்கினர்.
உணவு இடைவேளைக்கு முன்பாகவே இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வங்கதேச பேட்ஸ்மேன்கள் திணறினர். துவக்க வீரர் கயஸ் இஸ்லாம் 6 ரன்களுக்கு வெளியேறினார். அவருக்கு அடுத்ததாக வந்த கேப்டன் மோமினுல், முஸ்தபிசுர் ரஹ்மான், மிதுன் ஆகியோர் ரன் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினர்.
அடுத்து வந்த மூத்த வீரர் மகமதுல்லா 6 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, வங்கதேச அணி தடுமாற்றம் கண்டது. சற்று நிலைத்து ஆடி வந்த துவக்க வீரர் சத்மான் இஸ்லாம் 29 ரன்களுக்கு ஆட்டம் இழக்க 60 ரன்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலைக்கு வங்கதேச அணி தள்ளப்பட்டது.
இந்திய பந்துவீச்சாளர்களை நன்றாக எதிர்கொண்டு வந்த லிட்டன் தாஸ், சமி வீசிய பந்தில் தலையில் அடிபட்டதால் நிலைகுலைந்து ரிட்டயர் ஹர்ட் ஆனார். இவர் 24 ரன்கள் எடுத்திருந்தார். இவருக்கு பதிலாக வெளியில் அமர்த்தப்பட்டு இருந்த மெய்தி ஹாசன் உள்ளே எடுத்து வரப்பட்டார்.
உணவு இடைவேளைக்கு பின்பு வங்கதேச அணியால் நீண்ட நேரம் நிலைத்து இருக்க முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்சில் 106 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
வேகப்பந்து வீச்சில் அசத்திய இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருக்கு பக்கபலமாக இருந்த உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும், முகமது சமி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சில் களம் இறங்க தயாராகி வருகிறது
ட்விட்டர் ரியாக்ஷன்: