மலேசியாவில் நடக்கும் பெண்களுக்கான ஆசிய கோப்பை டி20 போட்டியில் இந்திய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை.
மலேசியாவில் நடந்து வரும் பெண்களுக்கான ஆசிய கோப்பை டி20 போட்டியில் பங்களாதேஷ் இந்தியா இரு அணிகளும் மோதின. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன் ப்ரீத் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
துவக்க வீராங்கனையாக களமிறங்கிய மூத்த வீரர் மித்தாலி ராஜ் நன்கு விளையாடுவார் என எதிர்பாத்த நிலையில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த எவருமே பெரிதாக ஜொலிக்கவில்லை. சிற்ப ரன்களுக்கு விக்கெடுகளை இழந்து வெளியேறினர்.
மிகவும் போராடிய இந்திய அணியில் ஹர்மன் ப்ரீத் மட்டும் அதிரடியாக விளையாடி அரைசதம் எட்டினார்.42 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார். ஒரு கட்டத்தில் 100 ரன்கள் எட்டுவதே கடினம் என்ற நிலையில், ஹர்மன் ப்ரீத் ஆட்டம் நல்ல ஸ்கோரை எட்ட உதவியாக இருந்தது.
இந்திய அணி இறுதியாக 9 விக்கெடுகள் இழந்து 112 ரன்கள் எட்டியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்மன் 56 ரன்கள் எடுத்தார். 113 ரன்கள் எடுத்தால் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என்ற கனவுடன் களமிறங்கியது பங்களாதேஷ் அணி.
பங்களாதேஷ் அணிக்கு சுல்தானா, அயாசா இருவரும் நல்ல துவக்கம் அமைத்து கொடுத்தனர். முதல் 6 ஒவர்களில் ஒரு விக்கெட் கூட இழக்காமல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஹர்மன் ப்ரீத் 7வது ஓவர் வீச பூனம் யாதவை பணித்தார். அதே ஓவரில் துவக்க வீராங்கனைகள் இருவரும் அடுத்தடுத்து விக்கெட் இழக்க, ஆட்டம் சற்று இந்திய அணி பக்கம் திரும்பியது. ஆனால் கோஷ்வாமி வீசிய 15வது தொடர்ந்து 3 பவுண்டரிகளை விளாசினார் நிகர் சுல்தானா.
அங்கிருந்து தான் ஆட்டம் பங்களாதேஷ் பக்கம் திரும்பியது. இறுதியில் சற்று நெருக்கடி கொடுத்தாலும் ஆட்டம் இந்திய அணி பக்கம் திரும்பவே இல்லை.
கடைசி நிமிடம்
கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஹர்மன் ப்ரீத் பந்து வீசினார். மூன்றாவது நான்காவது பந்தில் அடுத்து அடுத்து விக்கெடுகள் விழுந்தது. கடைசி பந்தில் இரண்டு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ரன் அவுட் வாய்ப்பை தவற விட பங்களாதேஷ் அணி முதல் முறையாக ஆசிய கோப்பையை வென்றது.
ஆட்டநாயகி விருதை ரஹீம் அஹ்மது தட்டி சென்றார். தொடர் நாயகி விருது ஹர்மன் ப்ரீத் க்கு வழங்கப்பட்டது.
இதுவரை நடந்த அனைத்து ஆசியகோப்பை தொடரையும் இந்திய அணியே வென்றுள்ளது. கோப்பையை இழந்தது இதுவே முதல் முறை.