வங்கதேச வீரர் மீது நடவடிக்கை எடுத்த மத்திய அரசு: காரணம் என்ன?

வங்காளதேச கிரிக்கெட் வீரரான சாயிப் ஹசன் விசா முடிந்து இந்தியாவில் தங்கியிருந்த குற்றத்திற்காக கொல்கத்தா விமான நிலையத்தில் அபராதம் செலுத்திய பின் தாயகம் திரும்பினார்.

விசா காலம் முடிந்த பின்னும் தங்கியிருந்ததால் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

 

வங்காளதேசம் கிரிக்கெட் அணி இம்மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இந்திய அணிக்கு எதிராக 3 டி20 போட்டித்தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இரண்டு தொடரையும் வங்காளதேச அணி இழந்தது.

கொல்கத்தா விமான நிலையத்துக்கு திங்கட்கிழமை சென்ற அவரது பாஸ்போர்ட்டை, குடியேற்ற அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது அவரது விசா, முந்தையை நாளே முடிவடைந்திருந்தது தெரிய வந்தது. அதாவது அவருக்கு இந்திய விசா, கடந்த ஜூன் மாதம் வழங்கப்பட்டது. அந்த 6 மாத விசா ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்திருந்தது.

இரு அணிகளுக்கிடையேயான கடைசி டெஸ்ட் போட்டி, பகலிரவு ஆட்டமாக கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியின் மூன்றாம் நாளே இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அன்றிரவே வங்காளதேச அணி வீரர்கள் சிலர் தாயகம் திரும்பினர்.

டெஸ்ட் போட்டிகளில் மாற்று வீரராக பங்கேற்க வந்த சாயிப் ஹசன் கைவிரல்களிடையே ஏற்பட்ட காரணமாக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆனால் மற்ற வீரர்களுடன் தங்கியிருந்த ஹசனுக்கு தனது விசா முடிவடையும் காலம் தெரியவில்லை.

இதையடுத்து நேற்று மாலை தாயகம் செல்ல கொல்கத்தா விமான நிலையத்திற்கு சென்றபோது, அவரது விசா காலாவதியாகி இரண்டு நாட்கள் ஆகியுள்ளதை குடியுரிமை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதனால் டிக்கெட் பதிவு செய்திருந்த விமானத்தில் செல்ல அவர் அனுமதிக்கப்படவில்லை. குறிப்பிட்ட காலத்தை விட அதிகமாக தங்கியிருந்ததால் அபராதமாக ரூ.21 ஆயிரத்து 600 பணம் செலுத்திய பின் மற்றொரு விமானத்தில் ஏறி வங்காளதேசம் சென்றடைந்தார்.

இதுபற்றி பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்துக்கு அவர் புகார் செய்தார். பின்னர், டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் அவருக்கு புதிய விசாவை நேற்று வழங்கியது.

விசா காலம் முடிந்தும் தங்கியதால், அவருக்கு ரூ.21,600 அபராதமாக விதிக்கப்பட்டது. அதைக் கட்டிய பின், அவர் நேற்று மாலை டாக்காவுக்கு அனுப்பப்பட்டார்.

Sathish Kumar:

This website uses cookies.