மேலும் ஒரு கிரிக்கெட் வீரருக்கு கொரோனா; அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்!
வங்கதேச அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் மோஷரப் ஹுசைன்-க்கு இருப்பது உறுதியாகியுள்ளது.
உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து எவ்வித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் தள்ளிப்போனது.
இந்த கொரோனா பரவலினால் பல கிரிக்கெட் வீரர்களும் பாதிப்படைந்தனர். பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னாள் ஆல்ரவுண்டர் ஷாகித் அப்ரிடி உட்பட மொத்தம் 7 பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பினர்.
அதேபோல் வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் மோர்தாசாவிற்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் தற்போது வங்கதேச அணியை சேர்ந்த மற்றுமொரு வீரரான மோஷரப் ஹுசைனுக்கு கொரோனா தொற்று இருக்கிறது தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோரோனாவிற்கு பிறகு கிரிக்கெட் தொடர்:
கோரோணாவினால் மார்ச் மாதம் இறுதியில் இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரும் தள்ளிப்போனது. நாளுக்கு நாள் கோரோனாவால் பாதித்தவர்கள் அதிகரித்துக்கொண்டே இருந்த நிலையில், இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை தொடரை நடத்துவதில் மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஐசிசி தகவல் தெரிவித்தது.
பின்னர் இது குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை 2022 ஆம் ஆண்டிற்கு தள்ளி வைத்துவிடலாம் என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அந்த காலகட்டத்தை பயன்படுத்திக்கொண்ட ஐபிஎல் நிர்வாகம் ஐபிஎல் தொடரின் 13வது சீசனை நடத்தி முடிக்க முடிவு செய்தது.
இந்தியாவில் நடத்துவதற்கு அனுமதி கிடைக்காததால் இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த அனுமதி பெற்று செப்டம்பர் 19-ம் தேதி ஐபிஎல் தொடரில் துவங்க இருக்கிறது. இந்த தொடரானது சுமார் 53 நாட்கள் நடைபெற, இறுதிப் போட்டி நவம்பர் 10ஆம் தேதி நடக்கவிருக்கிறது என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளது.