விசா முடிந்தது தெரியாமல், இந்தியாவில் தங்கியிருந்த வங்கதேச வீரருக்கு கடுமையான அபராதம்!

விசா தேதி முடிந்தது தெரியாமல் இந்தியாவில் தங்கியிருந்த வங்கதேச கிரிக்கெட் வீரா் சயீப் ஹசனுக்கு ரூ.21,600 அபராதம் இந்திய அரசால் விதிக்கப்பட்டது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி 3 டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று இரண்டையும் உள்ளூர் அணியான இந்தியாவிடம் இழந்தது.

வங்கதேச அணிக்கு எதிரான தொடர் நவம்பர் 26ம் தேதி வரை நடக்கவிருந்தது. ஆனால் 24ஆம் தேதியுடன் போட்டிகள் முடிவுக்கு வந்தது

இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி வங்கதேச வீரர் சயீப் ஹசன் வங்கதேசம் செல்ல முயன்றபோது அவரது விசா காலாவதியானதை கொல்கத்தா விமான நிலைய அதிகாரிகள் கண்டறிந்தனா். விதிமுறைகளை மீறியதால் வங்கதேச வீரருக்கு ரூ.21,600 அபராதம் விதிக்கப்பட்டது.

விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்திய பின்னரே அவர் வங்கதேசம் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

விதிமுறை மீறிய வங்கதேச வீரர் குறித்து அறிந்த வங்கதேச துணைத் தூதா் டெளஃபிக் ஹசன் கூறுகையில், “இரண்டு நாள்களுக்கு முன்பு சயீப் ஹசனின் விசா காலாவதியானது. இதனால் அவா் அபராதம் செலுத்த நேரிட்டது. இந்தியத் தூதரகம் அவரை மீண்டும் வங்கதேசம் அனுப்ப உதவியதற்கு நன்றி’ என்றாா்.

முன்னதாக, வங்கதேச அணி வீரர்கள் அனைவரும் கடந்த 25ஆம் தேதியே நாடு திரும்பினா். ஆனால், சயீப் ஹசன் மட்டும் இந்தியாவில் தங்கியிருந்தாா். அவர் தங்கியிருந்ததற்கான காரணம் இதுவரை தெரியப்படுத்தப்படவில்லை.

முதலில், சயீப் ஹசன் பல காரணங்களை கூறியும் அவரை வாங்க தேசம் செல்ல கொல்கத்தா விமான நிலைய அதிகாரிகள் அனுமதிக்க்கவில்லை. பின்னர் வங்கதேச தூதரகத்திற்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னரே அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, நாடு திரும்ப அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.