பங்களாதேஷ் அணியின் முன்னாள் வீரர் மற்றும் தற்போதைய பங்களாதேஷ் கிரிக்கெட் செய்லபட்டு தலைவருமான அக்ரம் கானுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றை வருடங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் உலகெங்கும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது உருமாறிய கொரோனா முன்பை விட அதிகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸால் கிரிக்கெட் வீரர்களும் பாதித்து வருகின்றனர். தற்போது இந்தியாவில் 14வது ஐபிஎல் சீசன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே கிரிக்கெட் வீரர்கள் பலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தினர்.
ஆர்சிபி வீரர்கள் தேவதூத் படிக்கல், டானியல் சாம்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அக்ஷர் பட்டேல், கொல்கத்தா வீரர் நிதிஸ் ரானா ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு முன் நடைபெற்ற சாலை பாதுகாப்பு தொடரில் விளையாடிய இந்திய முன்னாள் வீரர்கள் சச்சின், பத்ரிநாத், யூசப் பதான் மற்றும் இர்பான் பதான் ஆகியோருக்கும் உறுதி செய்யப்பட்டது. இதுபோன்று கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆழந்த சோகத்தில் உள்ளனர்.
இந்நிலையில், பங்களாதேஷ் அணியின் முன்னாள் வீரர் மற்றும் தற்போதைய பங்களாதேஷ் கிரிக்கெட் செய்லபட்டு தலைவருமான அக்ரம் கானுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் பங்களாதேஷ் சர்வதேச அணிக்காக 8 டெஸ்ட் மற்றும் 44 ஒருநாள் தொடரில் விளையாடி இருக்கிறார். தற்போது இவர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து கிரிக்பஸில் பேசிய இவர் “கடந்த சனிக்கிழமை தொண்டை வழி மற்றும் சளியால் வதிப்பட்டதாகவும், இதனால் மேற்கொண்ட கொரோனா டெஸ்டின் முடிவு வந்தது.
இதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் தற்போது தனிமையில் இருப்பதாகவும்” கூறியிருக்கிறார். பங்களாதேஷ் அணி அடுத்தாக இலங்கை மற்றும் நியூசிலாந்து அணியுடன் சுற்றுப்பயணத் தொடரில் விளையாட இருக்கிறது. வருகின்ற சனிக்கிழமை தொடங்கும் இலங்கை சுற்றுப்பயணத் தொடருக்காக பங்களாதேஷ் வீரர்களுக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது.