புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் வீரர் நியமனம்!!

வங்கதேச அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேனியல் வெட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்கதேச கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் வேகப்பந்துவீச்சு பயிற்சிக்கு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சார்ல் லாங்குவேட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த கோர்ட்னி வால்ஸ் இடத்தை சார்ல் லாங்குவேட் நிரப்புவார் என தெரிவிக்கப்பட்டது. மேலும் சார்ல் லாங்குவேட் இரண்டு வருட காலம் இப்பதவிக்கு ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாகவும், அதே நேரம் டேனியல் வெட்டோரி நீண்ட காலத்திற்கு இருக்க மாட்டார் என்பதால், வெறும் நூறு நாட்களுக்கு மட்டும் தற்காலிக ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறார்.

சார்ல் லாங்குவேட் வங்கதேசம் வந்தவுடன் அவரது இரண்டு வருட பதவிக் காலத்திற்க்கான ஒப்பந்தம் கையெழுத்தாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, அடுத்து வரவிருக்கும் இந்திய அணிக்கு எதிரான தொடரில் டேனியல் வெட்டோரி இருப்பார். அதன் பிறகு உலக கோப்பை டி20 தொடருக்கு முன்னதாக அணியில் இடம் பெறுவார் என வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஸ்முல் ஹாசன் குறிப்பிட்டார்.

இதுகுறித்து நஸ்முல் ஹாசன் தெரிவிக்கையில்., “விட்டோரியுடன் நாங்கள் இன்னும் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்றாலும், அவர் எங்களுடன் பணியாற்ற ஒப்புக் கொண்டார். லாங்கேவெல்ட்டிடமிருந்தும் எங்களுக்கு உறுதிப்படுத்தல் கிடைத்தது,” என்று தெரிவித்துள்ளார்.

பிளாக் கேப் போட்டியாளர்களின் சாதனை நாயகன் விட்டோரி, நவம்பர் மாதம் இந்திய சுற்றுப்பயணத்துடன் வங்கதேசம் தொடங்கும் தொடரில் துவங்கி, அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக டி20 வரை வங்கதேச பயிற்சியாளராக பணியாற்றுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

2015-ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விட்டோரி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், பிக் பிளாஸ் அணி பிரிஸ்பேன் ஹீட் அணிக்கும் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.