கே.எல் ராகுல் பொறுமையான ஆட்டம்… மற்ற பேட்ஸ்மேன்கள் மட்டமான பேட்டிங்; 186 ரன்களில் சுருண்டது இந்திய அணி !!

கே.எல் ராகுல் பொறுமையான ஆட்டம்… மற்ற பேட்ஸ்மேன்கள் மட்டமான பேட்டிங்; 186 ரன்களில் சுருண்டது இந்திய அணி

வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 186 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி வங்கதேசத்தின் தாக்கா மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் 7 ரன்னிலும், ரோஹித் சர்மா 27 ரன்னிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர். இதன்பின் களமிறங்கிய விராட் கோலி 7 ரன்னிலும், ஸ்ரேயஸ் ஐயர் 24 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.

 

அடுத்ததாக களத்திற்கு வந்த கே.எல் ராகுல் நீண்ட நேரம் தாக்குபிடித்து 70 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து கொடுத்தார். கே.எல் ராகுலுக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறிது நேரம் தாக்குபிடித்த வாசிங்டன் சுந்தர் 43 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து கொடுத்தார். இதன்பின் களமிறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து அடுத்தடுத்து வெளியேறியதால் 41.2 ஓவரில் வெறும் 186 ரன்கள் மட்டுமே இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

வங்கதேச அணி சார்பில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதே போல் எபாடட் ஹூசைன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 

Mohamed:

This website uses cookies.