தரமான இளம் பந்துவீச்சாளருக்கு அணியில் இடம்… டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் கே.எல் ராகுல் !!

தரமான இளம் பந்துவீச்சாளருக்கு அணியில் இடம்… டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் கே.எல் ராகுல்

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்கதேச அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று துவங்குகிறது.

வங்கதேசத்தின் ஜஹூர் அஹமத் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் பொறுப்பு கேப்டனான கே.எல் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் குல்தீப் யாதவிற்கு இடம் கிடைத்துள்ளது. இது தவிர அக்‌ஷர் பட்டேல் மற்றும் ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோரும் சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது சிராஜும், உமேஷ் யாதவும் இடம்பெற்றுள்ளனர். பேட்ஸ்மேன்கள் வரிசையில் சுப்மன் கில், புஜாரா, கோலி, ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முதல் போட்டிக்கான வங்கதேச அணியின் ஆடும் லெவனில் ஜாஹிர் ஹசன் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர வழக்கமான அனைத்து வீரர்களும் முதல் போட்டிக்கான வங்கதேச அணியின் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்;

சுப்மன் கில், கே.எல் ராகுல், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், அக்‌ஷர் பட்டேல், ரவிச்சந்திர அஸ்வின், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

வங்கதேச அணியின் ஆடும் லெவன்;

ஜாஹிர் ஹசன், நஜிமுல் ஹூசைன், லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன், முஸ்பிகுர் ரஹீம், யாசிர் அலி, நூருல் ஹசன், மெஹ்தி ஹசன், தாஜுல் இஸ்லாம், கலீல் அஹமத், எபாடட் ஹூசைன்.

Mohamed:

This website uses cookies.