அதே ஆள்… அதே ஆட்டம்; தனி ஆளாக இந்திய பந்துவீச்சாளர்களை சமாளித்த மெஹ்தி ஹசன்; இந்திய அணிக்கு கடின இலக்கு !!

அதே ஆள்… அதே ஆட்டம்; தனி ஆளாக இந்திய பந்துவீச்சாளர்களை சமாளித்த மெஹ்தி ஹசன்; இந்திய அணிக்கு கடின இலக்கு

மெஹ்தி ஹசன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமும் அடித்ததன் மூலம் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்துள்ளது.

வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி வங்கதேசத்தின் தாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு துவக்கம் சரியாக கிடைக்கவில்லை, அந்த அணியின் துவக்க வீரர்களான லிட்டன் தாஸ் (7) மற்றும் அனாமுல் ஹக் (11) ஆகியோர் முகமது சிராஜின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதன்பின் களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன், நஜிமுல் ஹூசைன், முஸ்தபிசுர் ரஹீம் போன்ற நட்சத்திர வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வந்த வேகத்தில் வெளியேறியதன் மூலம் வங்கதேச அணி 69 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.

இதன்பின் கூட்டணி சேர்ந்த மெஹ்தி ஹசன் – மஹ்மதுல்லாஹ் ஜோடி வங்கதேச அணியை சரிவில் இருந்து மீட்கும் வகையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணியின் பந்துவீச்சை இலகுவாக எதிர்கொண்ட இந்த ஜோடி தேவைக்கு ஏற்ப ரன்னும் குவித்தது. நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு மஹ்மதுல்லாஹ்வின் (77) விக்கெட்டை உம்ரன் மாலிக் கைப்பற்றினார்.

சரியான ஒத்துழைப்பு கொடுத்து விளையாடிய மஹ்மதுல்லாஹ் விக்கெட்டை இழந்தபின்பும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஹ்தி ஹசன், கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் விக்கெட்டை இழக்காமல் இறுதி வரை களத்தில் இருந்து 83 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து, ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள வங்கதேச அணி 271 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக வாசிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், உம்ரன் மாலிக் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Mohamed:

This website uses cookies.