குல்தீப் யாதவ் நீக்கம்… இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது வங்கதேசம் !!

குல்தீப் யாதவ் நீக்கம்… இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது வங்கதேசம்

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று துவங்குகிறது.

வங்கதேசத்தின் மிர்பூர் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள வஙக்தேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்த போட்டிக்கான இந்திய அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. கடந்த போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்த குல்தீப் யாதவ் சம்மந்தமே இல்லாமல் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜெயதேவ் உனாத்கட்டிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது தவிர வேறு மாற்றங்கள் செய்யப்படவில்லை, கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இரண்டாவது போட்டிக்கான ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.

அதே போல் இரண்டாவது போட்டிக்கான வங்கதேச அணி, இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது. யாசிர் மற்றும் எபாடட் ஹூசைன் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மொமினுல் ஹூசைன் மற்றும் தஸ்கின் அஹமத் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியின் ஆடும் லெவன்;

கே.எல் ராகுல், சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் ஐயர், அக்‌ஷர் பட்டேல், ரவிச்சந்திர அஸ்வின், ஜெயதேவ் உனாத்கட், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

வங்கதேச அணியின் ஆடும் லெவன்;

நஜிமுல் ஹூசைன், ஜாஹிர் ஹசன், மூமினுல் ஹக், லிட்டன் தாஸ், முஸ்பிகுர் ரஹிம், ஷாகிப் அல் ஹசன், நூருல் ஹசன், மெஹ்தி ஹசன், தைஜுல் இஸ்லாம், காலித் அஹமத், தஸ்கின் அஹமத்.

Mohamed:

This website uses cookies.