அணியைவெற்றி பெற வைத்தது மகிழ்ச்சியாக உள்ளது: ஆட்டநாயகன் ஆஸ்டன் டர்னர்!!

இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது ஒரு நாள் ஆட்டத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா தொடரையும் 2-2 என சமன் செய்துள்ளது. பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 117, உஸ்மான் கவாஜா 91, அஷ்டன் டர்னர் 84 ரன்களுடன் வெற்றிக்கு வித்திட்டனர்.
இரு அணிகளுக்கு இடையிலான 4-ஆவது ஒரு நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மொஹாலியில் நடைபெற்றது. ரோஹித்துடன் இணைந்து அபாரமாக ஆடிய ஷிகர் தவன் தனது 16-ஆவது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். 97 பந்துகளில் அவர் சதமடித்தார். அப்போது இந்திய அணி 32 ஓவர்களில் 200-ஐ கடந்தது. ஷிகர் தவன் 3 சிக்ஸர், 18 பவுண்டரியுடன் 115 பந்துகளில் 143 ரன்களை விளாசி பேட் கம்மின்ஸ் பந்தில் போல்டானார். லோகேஷ் ராகுல் 26 ரன்களுடன் ஆடம் ஸம்பா பந்துவீச்சில் அவுட்டானார்.

விஜய் சங்கர் கடைசி வரிசையில் அதிரடியாக ஆடி 2 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 15 பந்துகளில் 26 ரன்களை விளாசி, அணியின் ஸ்கோர் 350-ஐ தாண்டச் செய்து அவுட்டானார்.
புவனேஸ்வர்குமார் 1 ரன்னிலும், சஹல் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாகினர்.
இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா 50-ஆவது ஓவரின் கடைசி பந்தில் பெரிய சிக்ஸரை விளாசினார். இதையடுத்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்களை எடுத்தது இந்தியா.

அஷ்டன் டர்னருடன் இணைந்து ரன்களை குவித்த ஹேண்ட்ஸ்கோம்ப் 117 ரன்கள் எடுத்திருந்த போது, சஹல் பந்துவீச்சில் வெளியேறினார். 3 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 105 பந்துகளில் இந்த ஸ்கோரை விளாசினார் அவர்.
வெற்றியை உறுதி செய்த டர்னர்-அலெக்ஸ் கரே: அஷ்டன் டர்னர் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். 6 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 43 பந்துகளில் 84 ரன்களை விளாசினார் டர்னர். அலெக்ஸ் கரே 21 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
2 ஓவர்கள் மீதமிருக்க 6 விக்கெட்டை மட்டுமே இழந்த ஆஸி. அணி 359 ரன்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் தொடரையும் 2-2 என சமன் செய்துள்ளது.
கடைசி ஒரு நாள் ஆட்டம் வரும் 13-ஆம் தேதி தில்லியில் நடக்கிறது. அதில் கட்டாயம் வெல்ல வேண்டிய நிலைக்கு இரு அணிகளும் தள்ளப்பட்டுள்ளன.
80 ரன்களை வாரி வழங்கிய சஹல்: சுழற்பந்து வீச்சாளர் யுஜவேந்திர சஹல் 10 ஓவர்களில் 80 ரன்களை வாரி வழங்கினார். இந்திய தரப்பில் புவனேஸ்வர், பும்ரா, குல்தீப் ஆகியோர் ரன்களை வாரி வழங்கினர்.

Sathish Kumar:

This website uses cookies.