ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக் தொடரின் சிட்னி சிக்சர்ஸ் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் கார்லோஸ் ப்ரத்வெய்ட்டை ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது நடந்து கொண்டிருக்கும் பிக் பாஷ் லீக் தொடரில் ஒரு வெற்றியை கூட ருசிக்காத சிட்னி சிக்சர்ஸ் அணியுடன் கார்லோஸ் ப்ரத்வெய்ட் விரைவில் இணைவார்.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடி வரும் கார்லோஸ் ப்ரத்வெய்ட், 2016ஆம் ஆண்டு பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடினார்.
சிட்னி சிக்சர்ஸ் அணியின் பயிற்சியாளர் கிரேக் ஷிப்பார்ட், ப்ரத்வெய்ட்டை அணியில் சேர்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினார்.
“அதிரடி ஆல்-ரவுண்டர் கார்லோஸ் ப்ரத்வெய்ட்டை வரவேற்கிறோம். அவரது அதிரடி பேட்டிங், அற்புதமான பௌலிங், பிரமாண்டமான பீல்டிங்கால் தான் இந்த டி20 போட்டிகளில் நட்சத்திர வீரராய் மாற்றியது,” என ஷிப்பார்ட் கூறினார்.
“சிட்னி சிக்சர்ஸ் அணி கார்லோஸ் ப்ரத்வெய்ட்டின் வரவேற்புக்காக காத்திருக்கிறோம். நாளை நடைபெறும் ஹோபார்ட் அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு, மீதம் உள்ள போட்டியில் அவர் எங்கள் அணிக்காக விளையாடுவார்,” எனவும் கூறினார்.
“அவர் சிட்னி சிக்சர்ஸ் அணியில் இருப்பது சந்தோசமாக இருக்கிறது,” எனவும் தெரிவித்தார்.
“அவர் உலகிலேயே பிரமாண்டமான டி20 கிரிக்கெட் வீரர். அவர் எங்கள் அணியுடன் இணைந்ததும், எங்கள் அணிக்கு மேலும் பலம் கூடும்.” என தெரிவித்தார்.
சிட்னி சிக்சர்ஸ் விளையாடிய ஐந்து போட்டிகளிலும் தோல்வி பெற்று, புள்ளி பட்டியலில் சிட்னி சிக்சர்ஸ் அணி கடைசி இடத்தில் இருக்கிறது. ஜனவரி 8ஆம் தேதி ஹோபார்ட் ஹாரிகன்ஸ் அணியுடன் சிட்னி சிக்சர்ஸ் அணி மோதுகிறது.