நிதிச்சுமையில் இருக்கும் பிசிசிஐக்கு ஆப்பு வைத்த உச்சநீதிமன்றம்! டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு அநீதி! ஏழு வருடம் கழித்து 4,800 கோடி இழப்பீடு!
ஐபிஎல் தொடரில் 2008ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை ஆடிய அணி டெக்கான் சார்ஜர்ஸ் அணி. ஹைதராபாத் நகரை மையமாகக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தது. 2009ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பை தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.
பின்னர் நான்கு வருடத்திற்கு உத்தரவாத தொகையாக 100 கோடி ரூபாய் செலுத்தாத காரணத்தினால் இந்த அணியின் உரிமையை ரத்து செய்தது பிசிசிஐ. இதனை எதிர்த்து டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் சார்பில் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தனி நீதிபதியின் அமர்வு அமைத்து விசாரிக்கப்பட்டது .
இந்த விசாரணையில் தற்போது தீர்ப்பு வெளிவந்துள்ளது. இந்த தீர்ப்பின் படி டெக்கான் சார்ஜர்ஸ் அணி தற்போதைய மதிப்பு 4,800 கோடி ரூபாய். பிசிசிஐ எடுத்த முடிவு சட்டத்திற்குப் புறம்பானது. இதன் காரணமாக இன்றைய மதிப்பு 4,800 கோடி ரூபாயை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நிதிச் சுமை இருக்கும் பிசிசிஐ இந்த வருட ஐபிஎல் தொடர் நடக்காமல் போனால் 4000 கோடி இழப்பீடு ஏற்படும் என்று புலம்பி வருகிறது. இதன் காரணமாக இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் என்றும் தெரிகிறது. முன்னதாக 2017 ஆம் ஆண்டு கொச்சி டஸ்கர்ஸ் 750 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தத் தொகை கூட தற்போது வரை பிசிசிஐ செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.