ஐபிஎல் இந்த வருடம் நடக்குமா என்று முக்கிய அறிவிப்பை அறிவிக்கப் போகும் சௌரவ் கங்குலி! பிசிசிஐ முழு ஆலோசனை
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் குறித்து இந்த வருட ஆலோசனை இன்று நடைபெற்று வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் நடக்க இருந்த ஐபிஎல் தற்போது வரை நடைபெறவில்லை. காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டதாக சவுரவ் கங்குலி அறிவித்திருந்தார்.
குறிப்பாக உள்ளூர் போட்டியான ரஞ்சி கோப்பை தொடரும் நடைபெறவில்லை. மேலும், இந்தியா பங்கேற்க இருந்த தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஜிம்பாவே, இங்கிலாந்து போன்ற அனைத்து தொண்டர்களும் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்றால் அந்த காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்த முடியாது. அந்த தொடர் ஒத்திவைக்கப்படும் பட்சத்தில் ஐபிஎல் போட்டிகளை செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிட்டிருந்தது பிசிசிஐ . ஆனால் ஐசிசி இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சௌரவ் கங்குலி தலைமையிலான உயர்மட்டக் குழுவின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் 11 விதமான விஷயங்கள் குறித்துப் பேசப் பட உள்ளன .குறிப்பாக ஐபிஎல் தொடரை எப்போது நடத்துவது? உள்ளூர் தொடர்பான ரஞ்சி கோப்பை தொடரை இந்த வருடம் நடத்தலாமா? இல்லை ஐபிஎல் தொடரை வெளிநாடுகளில் நடத்தலாமா? என்பது குறித்த விஷயங்கள் ஆலோசிக்கப்பட உள்ளது.
உள்ளூர் போட்டிகளான விஜய் ஹசாரே கோப்பை, சையது முஷ்டாக் அலி கோப்பை மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடர் என எல்லாம் எப்படி நடத்துவது என்ன சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
இதில் முக்கிய அம்சமாக அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடக்க உள்ளது. இந்த தொடருக்கு வரிவிலக்கு பெற்றுத்தர பிசிசிஐ, இந்திய அரசாங்கத்திடம் முறையிட உள்ளது. இதற்கான ஆலோசனையும் இன்று நடைபெற்று அறிவிக்கப்படும்.