ஹர்திக் பாண்டியா மீது நடவடிக்கை எடுக்க தயாராகும் பிசிசிஐ!!

காஃப் வித் கரண் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பெண்களைத் தரக்குறைவாகப் பேசியது குறித்து விளக்கமளிக்க ஹார்திக் பாண்டியா, கேஎல் ராகுலுக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் ஹார்திக் பாண்டியாவும் கேஎல் ராகுலும் பங்கேற்றார்கள். இதில் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்? சச்சினா விராட் கோலியா என்கிற கேள்விக்கு இருவருமே விராட் கோலி எனப் பதில் அளித்தார்கள். இதற்குச் சமூகவலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு உருவானது.

பெண்கள் பற்றி இழிவாகப் பேசியதற்காக பாண்டியாவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்து அடுத்த 24 மணிநேரத்துக்குள் பாண்டியா, ராகுல் இருவரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நியமன கிரிக்கெட் கமிட்டி தலைவர் விநோத் ராய் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பாண்டியா தன்னுடைய கருத்துக்கு மன்னிப்பு கேட்கும் விதமாக, ‘உள்ளபடியே கூற வேண்டுமெனில் நிகழ்ச்சியில் போக்கில் நான் லயித்துப் போய் அப்படி கூறிவிட்டேன், உண்மையில் எனக்கு யாரையும் புண்படுத்த வேண்டும், நோகடிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லை” என்று கூறி மன்னிப்பு கேட்டிருந்தார்

ஆனால் ராகுல் தரப்பிலிருந்து இன்னமும் எந்த ஒரு பதிலும் வரவில்லை.

பாண்டியாவின் கருத்து குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், ‘பாண்டியாவின் கருத்து மிகவும் இழிவானது, மலிவானது’ என்று பார்க்கப்படுவதாகவும் இதனால் இனி கிரிக்கெட் அல்லாத நிகழ்ச்சிகளில் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பதைத் தடை செய்ய பிசிசிஐ பரிசீலித்து வருவதாகவும் பிசிசிஐ-க்கு நெருங்கிய வட்டாரங்கள் பிடிஐ செய்தி ஏஜென்சியிடம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 12ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாண்டியா களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் பெண்களைத் தரக்குறைவாகப் பேசியது குறித்து விளக்கமளிக்க ஹார்திக் பாண்டியா, கேஎல் ராகுலுக்கு பிசிசிஐயின் நிர்வாகக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரராக இருந்துகொண்டு பொறுப்பில்லாமல் பேசியுள்ளார்கள். பாண்டியாவின் மன்னிப்பு போதாது என்று பிசிசிஐ தரப்பு கூறியுள்ளது.

 

பிசிசிஐ நிர்வாகக் குழுவின் தலைவரான வினோத் ராய் இந்தப் பிரச்னை குறித்துப் பேட்டியளித்ததாவது: ஹார்திக் பாண்டியா, ராகுல் ஆகியோரின் கருத்துகளுக்காக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 24 மணி நேரத்துக்குள் அவர்கள் பதிலளிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

Sathish Kumar:

This website uses cookies.