கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை

"Income Tax Department,BKC ,Bandra, Mumbai." *** Local Caption *** "Income Tax Department,BKC ,Bandra, Mumbai. Express photo by Vasant Prabhu. 1182012."

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

ஆண்டுதோறும் பிசிசிஐ அலுவலகம், வருமான வரிக் கணக்குகளை, வருமான வரித்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து வருகிறது. தற்போது பிசிசிஐ-யை தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ராகுல் ஜோரி நிர்வகித்து வருகிறார். மேலும் அவருக்கு உறுதுணையாக சந்தோஷ் ரங்கநேக்கர் (தலைமை நிதி அதிகாரி) உள்ளார். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் இருவரும் தங்களது பணிகளைச் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு பிசிசிஐ, தனது வருமான வரிக்

The Income tax department carried out almost 15-hour long raid surveying documents in the headquarters of Board of Control of Cricket (BCCI) in Wankhade stadium. According to reports in Mumbai Mirror, notices were sent to BCCI Chief Executive Officer (CEO) Rahul Johri and Chief Finance Officer (CFO) Santosh Rangnekar.

கணக்குகளை சமர்ப்பித்திருந்தது. இதில் வருமான வரிப் பிடித்தம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மும்பை வான்ஹடே ஸ்டேடியத்தில் அமைந்துள்ள பிசிசிஐ அலுவலகத்துக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

பின்னர் அங்குள்ள ஆவணங்களை அவர்கள் பார்வையிட்டு சோதனைகளை நடத்தினர். மொத்தம் 15 மணி நேரம் இந்த சோதனை நடந்தது. இதைத் தொடர்ந்து ராகுல் ஜோரி, சந்தோஷ் ரங்கநேக்கர் ஆகியோரை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவர்கள் நோட்டீஸ் கொடுத்தனர்.

The search was related to TDS deduction and statement received by the Income Tax department by the BCCI. There are crores paid by BCCI every year as TDS for various payments.

ஜனவரி 4-ம் தேதி காலை 11 மணிக்கு வந்த அதிகாரிகள் ஜனவரி 5-ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டனர். அதே நேரத்தில் பிசிசிஐ அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்திய விவகாரம் இப்போதுதான் தெரியவந்துள்ளது.

Editor:

This website uses cookies.