மீண்டும் புறக்கணிக்கப்பட்ட ரோஹித் சர்மா; கடுப்பில் ரசிகர்கள்  !!

மீண்டும் புறக்கணிக்கப்பட்ட ரோஹித் சர்மா; கடுப்பில் ரசிகர்கள்

இந்திய டெஸ்ட் அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிப்பட்டு வரும் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணியில் இருந்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் ஹனுமா விஹாரி, ப்ரிதீவ் ஷா போன்ற இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைத்துள்ள போதிலும், இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் சர்மாவிற்கும் அவரது ரசிகர்களுக்கும் ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது.

ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி வந்தாலும், கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக டெஸ்ட் போட்டியில் இடம்பெற முடியாமல் தவித்து வருகிறார். ரோஹித் சர்மாவிற்கு இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்று அவரது ரசிகரள் தொடர்ந்து வைத்து வரும் கோரிக்கை வைத்து வந்தாலும் ஒவ்வொரு தொடரிலும் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்து வருகிறது.

இந்நிலையில் ரோஹித் சர்மா மற்றும் அவரது ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தியாக, ஆஸ்திரேலிய ஏ அணியுடனான போட்டிக்கான இந்திய ஏ அணியில் இருந்தும் ரோஹித் சர்மா புறக்கணிப்பட்டுள்ளார். முதல் தர டெஸ்ட் போட்டிகளில் கூட ரோஹித் சர்மாவை புறக்கணிக்கும் வேலையை பி.சி.சி.ஐ., துவங்கிவிட்டதால் ரோஹித் சர்மா இனி டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த தொடருக்கான இந்திய ஏ அணியை, ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணியை சிறப்பாக வழிநடத்திய ஸ்ரேயஸ் ஐயரே வழிநடத்தி வருகிறார்.

இந்திய ஏ அணி; ,

ஸ்ரேயஸ் ஐயர், பாரத், சுப்மன் கில், மாயன்க் அகர்வால், சம்ரத், ஈஸ்வரன், அன்கிட் பாவ்னே, சபாஷ் நதீம், கவுதம், ராஜ்னேஷ் குர்பானி, குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், அன்கிட் ராஜ்புட்..

 

Mohamed:

This website uses cookies.