ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ போட்ட புதிய திட்டம்: வித்யாசமான அனுகுமுறையை பின்பற்றும் கங்குலி

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் குறிப்பிட்டபடி ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த முடியுமா என்ற சந்தேகன் எழுந்தது. செப்டம்பர் மாதம்
இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் – செப்டம்பர் மாதத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்குவதற்கு முன்பாக ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Varun Aaron of Rajasthan Royals celebrates the wicket of Chris Lynn of Kolkata Knight Riders during match 43 of the Vivo Indian Premier League Season 12, 2019 between the Kolkata Knight Riders and the Rajasthan Royals held at the Eden Gardens Stadium in Kolkata on the 25th April 2019
Photo by: Ron Gaunt /SPORTZPICS for BCCI

இந்த முடிவுக்கு அடுத்த 4 மாதங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தி விடலாம் என பிசிசிஐ நம்புவதாக தெரிகிறது. இதற்காக ஐபிஎல் நிர்வாக குழு தொடரை நடத்த அனைத்து வழிமுறைகளையும் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு, குறைந்த போட்டிகள் கொண்ட தொடர், இந்திய வீரர்களை மட்டும் கொண்ட தொடர் என அனைத்து விதமான வாய்ப்புகளையும் ஆய்வு செய்து வருகிறது.

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பிசிசிஐக்கு மிகப்பெரிய வருமானம் அளிக்கும் தொடராக உள்ளது. இதனால் ஐபிஎல் தொடரை நடத்தும் அனைத்து வழிமுறைகளையும் பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. மேலும் அடுத்ததாக நடக்கவுள்ள ஆசிய தொடர் காரணமாக ஐபிஎல் தொடரை முழுமையாக ரத்து செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஆசிய கோப்பை தொடரை வேறு தேதிக்கு ஒத்தி வைக்க பிசிசிஐ, ஆசிய கிரிக்கெட் கவுண்சில் இடம் வேண்டுகோள் வைக்கும் என தெரிகிறது.

Bengaluru: Chennai Super Kings’ Ambati Rayudu in action during an IPL 2018 match between Royal Challengers Bangalore and Chennai Super Kings at M.Chinnaswamy Stadium in Bengaluru on April 25, 2018. (Photo: IANS)

இதற்கிடையில் வெறும் 37 நாட்கள் கிடைத்தாலே ஐபிஎல் கிரிக்கெட் தொடரை முழுமையாகவோ அல்லது குறுகிய தொடராகவோ நடத்திவிடலாம் என பிசிசிஐ ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக பருவநிலை காரணமாக போட்டிகள் பாதிக்கப்படாத ஊர்களை தேர்வு செய்து வருதாகவும் பிசிசிஐயின் நெருங்கிய வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே மார்ச், ஏப்ரல் மாதத்தில் பாதி போட்டிகளையும், இரண்டாவது பாதியாக அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.

Sathish Kumar:

This website uses cookies.