ஒரே ஒரு மைதானத்தில் மொத்த ஐபிஎல் தொடரையும் நடத்த பிசிசிஐ திட்டம்! இந்த மைதானம் தாக்கு பிடிக்குமா?

ஐபிஎல் இல்லாமல் 2020 ஆண்டு முடிவடையாது என்று பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரை இந்த ஆண்டு நடத்திவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் பிசிசிஐ அதற்கான பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஐபிஎல் பங்குதாரர் ஒருவர் முழு தொடரையும் மும்பையில் மட்டுமே நடத்தலாம் என்ற யோசனையை பரிந்துரைத்துள்ளார்.

கரோனா பாதிப்பால் மார்ச் மாதம் நடைபெற விருந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் தொடரை அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடத்த பிசிசிஐ முயற்சி செய்து வருகிறது. ஆனால் பிசிசிஐயின் முடிவு டி 20 உலகக்கோப்பை தொடர் குறித்த ஐசிசியின் முடிவை பொறுத்தே அமையும்.

இந்த சூழ்நிலையில் பிசிசிஐ அதிகாரி ஒருவர், “ஐபிஎல் தொடர் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும் போது மும்பையில் நிலைமை கட்டுப்பாட்டில் இருக்கும். மும்பையில் 4 சிறந்த மைதானங்கள் உள்ளது. மும்பையில் தொடரை நடத்தினால் எல்லாவற்றையும் சீராக நிர்வகிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

ஐ.பி.எல் மும்பையில் நடைபெற வேண்டும் என்றா கோவிட் -19 நிலைமை சரியாக வேண்டும் என்பதை தாண்டி வான்கடே, பிராபோர்ன் மற்றும் டி.ஒய் பாட்டீல் (நவி மும்பை) ஆகிய மூன்று முக்கிய மைதானங்கள் மட்டுமே நகரத்தில் உள்ளன என்பதே உண்மை. இது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும்.

பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி முன்பு, “ஐபிஎல் இல்லாமல் 2020 ஆண்டு முடிவடையாது. ஐபிஎல் தொடரை நடத்துவது தொடர்பான அனைத்தையும் பிசிசிஐ செய்யும். பிசிசிஐ சுமார் 4000 கோடி ரூபாய் வரை இழக்கும் அபாயத்தில் உள்ளது. ஐபிஎல் தொடர் ரசிகர்கள் இல்லாமல் நடந்தால் கூட, சிறப்பானவற்றை பிசிசிஐ செய்யும்” என்று கூறியிருந்தார்.

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் இடையே நடக்க இருக்கும் கிரிக்கெட் தொடர் மீண்டும் கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஒரு தொடக்கமான இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிகள் பாதுகாப்பான சூழலில் விளையாடப்படுகின்றன. மும்பையில் இதேபோன்ற பாதுகாப்பான சூழலில் போட்டிகளை நடத்த முடியும் என்றால் ஐபிஎல் தொடர் முன்னேற வாய்ப்பு உள்ளது.

Mohamed:

This website uses cookies.