இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி. முன்னாள் கேப்டனான அவர் பற்றி சமீபகாலமாக சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. அவர் ஓய்வு பெற வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. உலகக் கோப்பைக்குப் பிறகு அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என்றும் கூறப்பட்டது.
’இந்திய கிரிக்கெட் அணிக்கு அவரது பங்களிப்பு அதிகம். அதனால் ஓய்வு முடிவை அவர்தான் எடுக்க வேண்டும்’ என்று சிலரும் ’அவர் இன்னும் சிறப்பாகவே ஆடி வருகிறார். அவர் ஓய்வு பெற வேண்டிய அவசியமில்லை’ என சிலரும் கூறி வருகின்றனர். முன்னாள் வீரர்கள் சச்சின், கங்குலி போன்ற வீரர்களுக்கு ஏற்பட்ட அதே நிலை, இப்போது தோனிக்கும் வந்திருக்கிறது.
டி20 உலகக் கோப்பை வரவுள்ள நிலையில் அணியை தயார்படுத்துவதில் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என கோலி கூறியுள்ளார். மேலும் 20 வீரர்கள் கொண்ட தொகுப்பை உடனே ஏற்படுத்தவும், கேதார், தினேஷ் கார்த்திக்கை நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தோனி மீண்டும் இடம்பெறுவது சந்தேகமாகவே உள்ளது.
கோலி, ரோஹித், பும்ரா, ராகுல், ரிஷப் பந்த், குல்தீப், புவனேஷ்வர் குமார் ஆகியோர் இதன் முக்கியமானவர்களாக இருப்பர்.
பாண்டே, ஐயர், ஷுப்மன் கில், பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் அதிரடியாக ஆடுபவர்களாக கருதப்படுகின்றனர்.
பந்துவீச்சில் நவ்தீப் சைனி, கலீல் அகமது, தீபக் சஹார், சுழற்பந்தில் ராகுல் சஹார், மயங்க் மார்க்கண்டே, ஆல் ரவுண்டர் க்ருணால் பாண்டியா, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சசு சாம்சன் ஆகியோருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
அடுத்த 2020 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள நிலையில், ஒருநாள் ஆட்டங்களில் இருந்து அதில் கவனம் செலுத்தி, அதற்கு தயாராகும் வகையில் சீரமைப்பை மேற்கொள்ள அணி நிர்வாகம் முனைப்பாக உள்ளது.
மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்த போதே, ஒருநாள் உலகக் கோப்பைக்கு 2 ஆண்டுகள், டி20 உலகக் கோப்பைக்கு 18 மாதங்கள் முன்னதாகவே அணியை தயார்படுத்தும் கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அடுத்த இந்தியா எதிர்கொள்ளும் பெரிய போட்டி டி20 உலகக் கோப்பையாகும். 4 ஆண்டுகள் கழித்து இப்போட்டி மீண்டும் நடைபெறுகிறது. எம்எஸ்கே. பிரசாத் தலைமையிலான தேர்வாளர் குழு பிசிசிஐ புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் வரை பதவியில் நீடிக்கும் நிலையில்,