விரைவில் அறிமுகமாகிறது பெண்களுக்கான ஐ.பி.எல் டி.20 தொடர்
ஆண்களுக்கு நடத்தப்படும் ஐ.பி.எல் டி.20 தொடரை போல் பெண்களுக்கும் ஐ.பி.எல் தொடரை நடத்த பி.சி.சி.ஐ., திட்டமிட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தொடரின் 11வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது
இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை கோடிகளை குவித்து எடுத்து கொண்டு, ஐ.பி.எல் தொடருக்கு தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இந்த தொடர் நடைபெறும் போது பெண்கள் கிரிக்கெட் அணிக்கு சில டி.20 போட்டிகளை நடத்த பி.சி.சி.ஐ., திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது பெண்களுக்கான ஐ.பி.எல் தொடரை அறிமுகப்படுத்துவதற்கான முன்மாதிரி என்று தெரிகிறது.
பெண்களுக்கான ஐ.பி.எல் தொடர் நடத்துவதற்கான மைதானங்கள் குறித்தும், மைதாத்தின் தன்மைகள் குறித்தும் அறிந்து கொள்வதற்காக பி.சி.சி.ஐ., இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது
இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை கோடிகளை குவித்து எடுத்து கொண்டு, ஐ.பி.எல் தொடருக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.