ஐபிஎல் தொடரில் இனி 8 அணிகள் இல்லை: பிசிசிஐ புதிய அறிவிப்பு!!

ஐபிஎல் தொடரில் தற்போது 8 அணிகள் இருக்கும் நிலையில், அதானி நிறுவனம், டாடா நிறுவனம், ஆர்பிஜி நிறுவனம் புதிதாக களமிறங்கி 10 அணிகளாக உயர்த்த உரிமையாளரக்ள் தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது

ஐபிஎல் போட்டித் தொடரில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. கடந்த 2011 முதல் 2013 ம் ஆண்டுவரை 8 அணிகளுக்கும் அதிகமான 10 அணிகள் பங்கேற்று இருந்தன. ஆனால், கொச்சி டஸ்கர்ஸ், புனே வாரியர்ஸ் அணிகள் இருந்தபோது, உரிமைகளுடன் பிசிசிஐ ஏற்பட்ட பிரச்சினையால் 2014-ம் ஆண்டில் இருந்து 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வருகின்றன.

David Warner of Sunrisers Hyderabad and Wriddhiman Saha of Sunrisers Hyderabad during match 48 of the Vivo Indian Premier League Season 12, 2019 between the Sunrisers Hyderabad and the Kings XI Punjab

இந்நிலையில் அணிகளின் உரிமையாளர்கள் லண்டனில் கடந்த வாரம் கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது 2020ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் கூடுதலாக இரு அணிகள் சேர்க்கவும் யோசனை தெரிவித்துள்ளனர். அதில் அதானி நிறுவன்தின் சார்பில் ஒரு அணியும, டாடா குழுமத்தின் சார்பில் ஒரு அணியும் வருவதாக பேசப்பட்டுள்ளது. இது தவிர ஆர்பிஜி நிறுவனமும் தனக்கென அணி தேவை எனக் கோரியுள்ளது.


Photo by: Arjun Singh / IPL/ SPORTZPICS

அகமதாபாதில் இருந்து அதானி நிறுவனம் சார்பில் அணியும், ஜாம்ஷெட்பூரில் இருந்து டாடா அணியும், புனே அடிப்படையாகக் கொண்டு ஆர்பிஜி அணியும் வருவதற்கு பேசப்பட்டுள்ளது.

இதுகுறித்து அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஐபிஎல் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ” அதிகாரபூர்வமற்ற வகையில், அணி நிர்வாகிகள் தரப்பில் லண்டனில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், எந்த திட்டமும் உறுதியாகவில்லை. அதிகமான அணிகளைக் கொண்டு போட்டிகளை அதிகப்படுத்த பேசப்பட்டது. அனைவரும் சேர்ந்து பிசிசிஐ அமைப்பிடம் பேச வேண்டும் ” எனத் தெரிவித்தார்.

Mitchell McCleneghan of the Mumbai Indians and Ben Cutting of the Mumbai Indians celebrates the wicket of Chris Gayle of the Kings XI Punjab during match fifty of the Vivo Indian Premier League 2018

ஆதலால், அடுத்த முறை ஐபிஎல் போட்டியில் 8 அணிகளுக்கு பதிலாக 10 அணிகள் இடம் பெறுவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன எனத் தெரிகிறது.

Sathish Kumar:

This website uses cookies.