ஐசிசியை முடிச்சாச்சு! அடுத்து புதிதாக ஒரு இடத்தில் ஐபிஎல் தொடரை நடத்த அனுமதி கோரும் பிசிசிஐ!

ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கு அனுமதி தருமாறு மத்திய அரசிடம் பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் 2020 டி20 லீக் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டி20- உலக கோப்பை போட்டியை நடத்த வாய்ப்பில்லாததால் செப்டம்பர், அக்டோபரில் ஐபிஎல் லீக்கை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால், போட்டியை எங்கள் நாட்டில் நடத்தலாம் என விருப்பம் தெரிவித்தது. இலங்கையும் விருப்பம் தெரிவித்திருந்தது.

இதுகுறித்து ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் கூறியிருப்பதாவது:

ஐபிஎல் அட்டவணையை இறுதி செய்வது பற்றி 10 நாளில் ஆலோசனை நடத்தப்படும். எதுவாக இருந்தாலும் ஐபிஎல் தொடரை நடத்த மத்திய அரசின் அனுமதி தேவை.

எனவே ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து மத்திய அரசிடம் ஐபிஎல் நிர்வாகம் அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா சூழலை கருதி செப்டம்பரில் இந்தியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதிக்க கோரி மத்திய அரசிடம் பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் ” ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம் இன்னும் 10 நாளில் நடைபெற இருக்கிறது. இப்போதைக்கு ஐபிஎல் தொடரின் 60 போட்டிகளையும் அமீரகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்தப் போட்டிகளுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா இல்லையா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என்றார்.

 

மேலும் தொடர்ந்த அவர் ” ஐபிஎல் போட்டிகளுக்கு தயாராக நம்முடைய வீரர்களுக்கு மூன்று அல்லது நான்கு வாரங்களாவது தேவைப்படும். எனவே போட்டிகள் குறித்த அட்டவனையை விரைந்து முடிப்போம். அப்போதுதான் வீரர்களுக்கு தயாராக நேரம் கிடைக்கும்” என்றார்.

Mohamed:

This website uses cookies.