இந்திய வீரர்கள், பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு வழங்கப்பட்ட ஊதிய விவரங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) வெளியிட்டுள்ளது.
இதில் வீரர்களுக்கு போட்டித் தொகைக்கான ஊதியம், அணிக்கான ஒப்பந்த ஊதியம் ஆகியவையும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு முன்தேதியிட்ட ஒப்பந்த ஊதியமும் அளிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து 2-வது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்தமைக்காக கேப்டன் விராட் கோலி, அணி வீரர்களுக்கு பங்குத் தொகையாக வீரர் ஒருவருக்கு ரூ.29 லட்சத்து 27 ஆயிரத்து 700 வழங்கப்பட்டுள்ளது.
பயிற்சியாளர் ரவி சாஸ்திரி
பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கடந்த ஜூலை மாதம் முதல் வரும் அக்டோபர் மாதம் வரையிலான முன் தேதியிட்ட தொகையாக ரூ.2.05 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்டியா
2018 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை ரூ.50 லட்சத்து 59 ஆயிரத்து 726
2017 அக்டோபர் முதல் டிசம்பர் வரை ரூ.60 லட்சத்து 75 ஆயிரம்
செடேஷ்வர் புஜாரா
ஐசிசி டெஸ்ட் தரவரிசை பரிசுத் தொகை ரூ.29 லட்சத்து 27 ஆயிரத்து 700
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான ஊதியம் ரூ.60 லட்சத்து 80 ஆயிரத்து 735
2017 அக்டோபர் முதல் டிசம்பர் வரை ஒப்பந்த ஊதியம் ரூ.92 லட்சத்து 37 ஆயிரத்து 329
2018 ஜனவரி முதல் மார்ச் வரை ரூ.ஒரு கோடியை 12 லட்சத்து 5 ஆயிரம்
இசாந்த் சர்மா
ஐசிசி டெஸ்ட் தரவரிசை பரிசுத்தொகை ரூ.29.27 லட்சம்
2018 ஜனவரி முதல் மார்ச் வரை ஊதியம் ரூ.55.42 லட்சம்
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் ஊதியம் ரூ.48.44 லட்சம்
ஜஸ்பிரித் பும்ரா
2018 ஜனவரி முதல் மார்ச் வரை ஒப்பந்த ஊதியம் ரூ.1.14 கோடி
2017 அக்டோபர் முதல் டிசம்பர் வரை ஊதியம் ரூ.60.75 லட்சம்
குல்தீப் யாதவ்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஊதியம் ரூ.25.5 லட்சம்
பர்தீவ் படேல்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஊதியம் ரூ.44 லட்சம்
தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்
2018 ஜனவரி முதல் மார்ச் வைர ஒப்பந்த ஊதியம் ரூ.53.42 லட்சம்
2017 அக்டோபர் முதல் டிசம்பர் வரை ஒப்பந்த ஊதியம் ரூ.60.75 லட்சம்
புவனேஷ்வர் குமார்
புவனேஷ்வர் குமார்
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் ஊதியம் ரூ.56.83 லட்சம்
தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடர் ஊதியம் ரூ.27.14 லட்சம்
2018 ஜன முதல் மார்ச் வரை ஊதியம் ரூ.1.18 கோடி
ஐசிசி டெஸ்ட் தரவரிசை பரிசு தொகை ரூ.29.27 லட்சம்
2017 அக்டோபர் முதல் டிசம்பர்வரை ஒப்பந்த ஊதியம் ரூ.1.41 கோடி
ஆர்.அஸ்வின்
அஸ்வின்
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான ஊதியம் ரூ.52.70 லட்சம்
2018 ஜனவரி முதல் மார்ச் வரை ஒப்பந்த ஊதியம் ரூ.92.37 லட்சம்
ஐசிசி பரிசுத் தொகை ரூ.29.27 லட்சம்
2017 அக்டோபர் முதல் டிசம்பர் வரை ஊதியம் ரூ.1.12 கோடி
ரோகித் சர்மா
தெ. ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான ஊதியம் ரூ.56.96 லட்சம்
தெ.ஆப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான ஊதியம் ரூ.30.70 லட்சம்
இலங்கையில் நடந்த நிடாஸ் கோப்பை ஊதியம் ரூ.25.13 லட்சம்
ஐசிசி பரிசுத் தொகை ரூ.29.27 லட்சம்
கேப்டன் விராட் கோலி
தென் ஆப்பிரிக்க ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் பெற்ற பரிசுத் தொகை, ஐசிசி தொகை ஆகியவற்றைச் சேர்த்து ரூ.1.25 கோடி வழங்கப்படுகிறது.
தெ. ஆப்பிரிக்க ஒருநாள் தொடர் ஊதியம் ரூ.65 லட்சம்
தெ. ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் ஊதியம் ரூ.30.70 லட்சம்
ஐசிசி பரிசுத் தொகை ரூ.29.27 லட்சம்
யஜுவேந்திர சாஹல்
தெ.ஆப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான ஊதியம் ரூ.25 லட்சம்
2018 ஜன முதல் மார்ச் வரை ஒப்பந்த ஊதியம் ரூ 53.42 லட்சம்
2017 அக் முதல் டிசம்பர் வரை ஒப்பந்த ஊதியம் ரூ.60.75 லட்சம்
விர்திமான் சாஹா
தென் ஆப்பிரிக்கத் தொடருக்கான ஊதியம் ரூ.44.34 லட்சம்
ஷிகர் தவண்
2018 ஜனவரி முதல் மார்ச் வரை ரூ.1.12 கோடி
இலங்கை பயணத்துக்கான ஊதியம் ரூ.27 லட்சம்
2017 அக்டோபர் முதல் டிசம்பர் வரை ஒப்பந்த ஊதியம் ரூ.1.42 கோடி