அழகுடன் அறிவு; திறமையான பெண்ணை கை பிடிக்கிறார் யுஸ்வேந்திர சாஹல்
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல், பிரபல யூடியூபர் தனஸ்ரீ வர்மாவை கரம்பிடிக்க உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், இந்திய அணியில் தனக்கான ஒரு இடத்தை கெட்டியாக பிடித்து கொண்டு, தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வருகிறார்.
ஐ.பி.எல் தொடரிலும் பெங்களூர் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் யுஸ்வேந்திர சாஹல், சமூக வலைதளங்களில் எப்பொழுதும் அக்டிவாக இருக்கும் இந்திய வீரர்களில் முதன்மையானவர். விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா சர்மா லைவில் வந்தாலும் கூட வாண்டடாக சென்று கமெண்ட் போட்டு வம்பிழுக்கும் அளவிற்கு இந்திய அணியின் சுட்டி பையனாக திகழ்ந்து வரும் யுஸ்வேந்திர சாஹல், பிரபல யூடியூபர் தனஸ்ரீ வர்மாவை திருமணம் செய்ய உள்ளார்.
தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதை தனது இன்ஸ்டா பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ள யுஸ்வேந்திர சாஹல், அதில் தான் கரம்பிடிக்க உள்ள பெண்னுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
சாஹலுக்கு விராட் கோஹ்லி, சேவாக், வாசிங்டன் சுந்தர் போன்ற பல வீரர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சாஹல் மணக்கவுள்ள பெண்ணின் பெயர் தனாஸ்ரீ. மருத்துவரான இவர், நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி, அதில் நடனமாடி தனது திறமையை வெளிக்காட்டுவதுடன், பார்வையாளர்களையும் மகிழ்வித்துவருகிறார். அவரது யூடியூப் சேனலை 15 லட்சம் பேர் பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது.