வருகிற ஜூன் மாதம் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டிகள் நடக்க இருக்கிறது. சமீபகாலமாக இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக விளையாடி வரும் பென் ஃபோக்ஸ் அதில் விளையாடுவார் என்று எதிர் பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது அவர் காயம் காரணமாக நடக்க இருக்கும் டெஸ்ட் தொடரில் விளையாட போவதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் பென் ஃபோக்ஸ்
2018 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவிற்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் இவர் விளையாடத் தொடங்கினார். தனது முதல் டெஸ்ட் இன்னிங்சில் மிக அற்புதமான விளையாடி சதம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் தற்போது அவரை மொத்தமாக 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவர் விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளும் இங்கிலாந்தை விட்டு வெளிநாட்டில் தான் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது கன்ட்ரி கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தவறு கீழே விழுந்துள்ளார். அதில் இவரது கால் காயம் அடைந்தது.எனவே தனது சொந்த நாட்டில் முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக இவர் விளையாட இருந்த நிலையில், தற்பொழுது காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.
சாம் பில்லிங்ஸ் விளையாட வாய்ப்பு
இவருக்கு மாற்று வீரராக சாம் பில்லிங்ஸுக்கு இங்கிலாந்து நிர்வாகம் அழைப்பு விடுத்திருக்கிறது. அணியில் ஏற்கனவே ஜேம்ஸ் பிரேசி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல அணியில் ஹசீப் ஹமீது 2011-ம் ஆண்டுக்குப் பின்னர் தற்போது மீண்டும் இங்கிலாந்து அணியில் விளையாட வந்திருக்கிறார்.
இந்த ஆண்டு நடைபெற்று வரும் கன்ட்ரி கிரிக்கெட் தொடரில், அவர் 474 ரன்களை குவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் அவரது பேட்டிங் ஆவெரேஜ் 52.5 66 ஆகும். எனவே அவரது வருகை இங்கிலாந்து அணிக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.