இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று புனேவில் தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கு விரலில் காயம் ஏற்பட்டிருப்பதால் ஜோஸ் பட்லர் கேப்டனாக செயல்படுகிறார். டாஸ் வென்ற பட்லர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்திருக்கிறார். மேலும் இங்கிலாந்து அணியில் மோர்கன் இடத்தில் டேவிட் மாலனும், காயம் அடைந்த பில்லிங்ஸுக்கு பதிலாக லிவிங்ஸ்டனும், மார்க் வூட் பதிலாக ரீஸ் டோப்லியும் இடம் பெற்றிருக்கின்றனர்.
தற்பொழுது சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 258ரன்கள் அடித்து அதிரடியாக விளையாடி கொண்டிருக்கிறது. இதில் சிறப்பாக விளையாடிய கே எல் ராகுல் 108 பந்துகளுக்கு 100 ரன்கள் அடித்து தனது சதத்தை நிறைவு செய்துள்ளார் இதனைத் தொடர்ந்து ரிஷப் பந்த் 30 பந்துகளில் 57 ரன்கள் அடித்து அசத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக பல விதிமுறைகளை கொண்டு நடைபெற்றுக் கொண்டுள்ள இந்த போட்டியில் முக்கிய விதியாக பதில் எச்சில் வைத்து தேய்க்க கூடாது என்று குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பந்தை ஸ்விங் செய்வதற்காக பந்தில் எச்சில் தடவி பந்துவீசிய முயன்றுள்ளார் இதனை கவனித்த கள நடுவர் விரேந்தர் ஷர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பலரை அழைத்து இதே போன்று மீண்டும் செய்தார் உங்களது அணிக்கு அபராதமாக 5 ரன்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் அகமதாபாத்தில் நடந்த இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பிங்க்பால் டெஸ்ட் போட்டியில், பென் ஸ்டோக்ஸ் இதேபோன்று பந்தில் எச்சில் தடவி பந்து வீசியது குறிப்பிடத்தக்கது.
இதனால் இரண்டு முறை விதிமுறைகளை மீறியதால் பென்ஸ் ஸ்டோக்கிற்கு அபராதம் விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.