ஆஸ்திரேலிய தொடரின் மீதம் உள்ள போட்டிகள் பென் ஸ்டோக்ஸ் ஆடமாட்டார்!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 ஆட்டங்களில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இரு அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரென்ட் பிரிட்ஜில் இன்று நடக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்து இருந்த கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் காயம் குணமடையாததால் எஞ்சிய 3 ஆட்டங்களுக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் ஆடாத இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் உடல் தகுதி பெற்று விட்டதால் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணி : ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், இயோன் மோர்கன் (கே), ஜோஸ் பட்லர் (கீ), மொயின் அலி, டேவிட் வில்லி, லியாம் பிளென்கட், அடில் ரஷீத், மார்க் வூட், சாம் பைலிங்ஸ், டாம் கிர்ரன், ஜேக் பால்

ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில், 34 வருடங்களில் இல்லாத அளவு ஆஸ்திரேலிய அணி கடும் பின்னடைவை சந்தித் துள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவ்வப்போது கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். ஒவ்வொரு தொடர் முடிந்ததும் புள்ளிப்பட்டியல் வரிசையில் மாற்றம் ஏற்படும். அதன்படி, ஒரு நாள் போட்டி தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணி முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்த இடத்தில் இந்திய அணி இருக்கிறது. தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் அடுத்தடுத்த வரி சையில் இருக்கிறது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடிவரும்  ஆஸ்திரேலிய அணி, தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்துக்கு அந்த அணி தள்ளப்பட்டது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, முதல் ஐந்து இடங்களிலேயே சுற்றி சுற்றி வந்துகொண்டிருக்கும். கடைசியாக 1984ம் ஆண்டு ஜனவரி மாதம்தான் அந்த அணி ஆறாவது இடத்தில் இருந்தது. 34 வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் அந்த இடத்துக்குத் தள்ளப்பட்டி ருக்கிறது. இப்போது நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஒரு போட்டியில் வென்றால் கூட ஐந்தாவது இடத்துக்கு அந்த அணி முன்னேற வாய்ப்புள்ளது.

Editor:

This website uses cookies.